கோவில்பட்டியில் மாநில அளவிலான சீனியர் ஆண்கள் ஆக்கிபோட்டி நடைபெற்று வருகிறது. 3 மைதானங்களில் நடக்கும் இப்போட்டியில் 33 மாவட்ட அணிகள் பங்கேற்றன, இன்று வெள்ளிக்கிழமை மூன்றாம் நாள் முதல் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணி 4-0 என்ற கோல் கணக்கில் திருவாரூர் மாவட்ட அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது இரண்டாவது போட்டியில் சேலம் மாவட்ட அணி 5-1 என்ற கோல் கணக்கில் திருப்பூர் மாவட்ட அணியை வீழ்த்தியது. மூன்றாவது போட்டியில் கிருஷ்ணகிரி மற்றும் விருதுநகர் அணிகள் தலா […]
தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகிலுள்ள பணிக்கர்குளம் மேல தெருவைச் சேர்ந்தவர் கற்பக பாண்டியன். இவரது மனைவி சத்யா (வயது 23). இந்த தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று இரவு சத்தியா குழந்தையுடன், தம்பி குமாருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கயத்தார்- கோவில்பட்டி நெடுஞ்சாலையில் வந்தபோது எதிரே வந்த ஒரு டிப்பர் லாரி பைக் மீது மோதியதில் சத்யா குழந்தையுடன் கீழே விழுந்தார். இதில் லாரியின் பின்பக்க டயர் சத்யாவின் தலையில் ஏறி இறங்கியதில் […]
ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி இணைந்து நடத்தும் மாநில அளவிலான சீனியர் ஆண்கள் சாம்பியன் போட்டி கோவில்பட்டியில் 3 மைதானங்களில் நடந்து வருகிறது இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தின் முதல் போட்டியாக தூத்துக்குடி மாவட்ட அணி 2-0 என்று கோல் கணக்கில் வேலூர் மாவட்ட அணியை தோற்கடித்தது. தூத்துக்குடி மாவட்ட அணிக்கு இது இரண்டாவது வெற்றி ஆகும். அடுத்து திருநெல்வேலி மாவட்ட அணி திருப்பூர் மாவட்ட அணியை வீழ்த்தி வெற்றி […]
நாடு முழுவதும் ஜூன் 5 ம் தேதி(இன்று) சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும், விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி தேசிய பசுமை படை மாணவ, மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் ரெயில் நிலைய வளாகத்தில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டி சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சுற்றுச்சூழல் தொடர்பாக நடந்த கலை இலக்கிய போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு மற்றும் திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது. கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ரெயில் […]
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி 102 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக,மற்றும் திருநெல்வேலி தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை , நேதாஜி விவேகானந்தா சேவா சங்கம் ஆகியவை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தின. கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி சமுதாய நலக்கூடத்தில் நடந்த முகாமை திமுக மத்திய ஒன்றிய செயலாளர் முருகேசன் தொடங்கி வைத்தார்.திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ்,அரசு வழக்கறிஞர் […]
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே காந்தி மண்டபத்தில் மே 21 தொடங்கிய புத்தக கண்காட்சி ஜூன் 9 வரை நடக்கிறது. வருகிறது. ஒவ்வொரு நாளும் ஓவியம்,கட்டுரை,உள்ளிட்ட கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நடந்த வான் நோக்குதல் நிகழ்வில் புத்தக கண்காட்சிக்கு வருகை தந்த வாசகர்கள் டெலஸ்கோப்பில் நிலாவை பார்வையிட ஏற்பாடு செய்யபப்ட்டது. தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப்,தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் நடந்த இந்த நிகழ்வில் […]
ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு மற்றும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி இணைந்து நடத்தும் கே.ராமசாமி பிறந்தநாள் கோப்பைக்கான சீனியர் ஆண்கள் மாநில ஆக்கி சாம்பியன் போட்டி இன்று (ஜூன் 4) தொடங்கி 8 -ந்தேதி வரை நடக்கிறது. கோவில்பட்டி கே ஆர் கலைக் கல்லூரி ஆக்கி மைதானத்தில இன்று காலை நடந்த தொடக்க விழாவுக்கு கே ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அருணாச்சலம் தலைமை தாங்கினார்.முதல் போட்டியை கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர்கள் தொடக்கி வைத்தனர் […]
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கும் தேமுதிக சார்பில் தொகுதி பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டி தொகுதிக்கு மாநில பொதுக்குழுஉறுப்பினர் காளிதாஸ், விளாத்திகுளம் தொகுதிக்கு ஒன்றியசெயலாளர் தங்கச்சாமி ஆகிய இருவரையும் மாவட்டசெயலாளர் சுரேஷ் மற்றும் மண்டல பொறுப்பாளர் எஸ்.எஸ் எஸ் சந்திரன் பரிந்துரையில் அறிவித்துள்ளார். இவர்களுக்கு மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கிளை வார்டு கழக செயலாளர்கள் நிர்வாகிகள் முழுஒத்துழைப்பு தருமாறு கேட்டுகொண்டுள்ளார்
கோவில்பட்டி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளுக்கான தாட்கோ உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி தலைவர் கா.கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட தாட்கோ மேலாளர் ஜெனிசிஸ் சியா, தமிழ்நாடு தூய்மைப்பணியாளர் நல வாரிய உறுப்பினர் விஜயசங்கர், நகர்நல ஆ. அலுவலர் வசுமதி, துப்புரவு அலுவலர் இளங்கோ மற்றும் துப்புரவு ஆய்வாளர் இரா.ஆரியங்காவு ஆகியோர் முன்னிலை வகித்தனார் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சி யின் போது 321 தூய்மை பணியாளர்களுக்கு தாட்கோ நலத்திட்ட உறுப்பினர் […]
கோவில்பட்டி நகர திமுக சார்பில் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாள் விழா நடந்தது. பேருந்து நிலையம் அருகே நடந்த விழாவில் கோவில்பட்டி நகர்மன்ற தலைவரும் திமுக நகர செயலாளருமான கருணாநிதி தலைமை தாங்கி, கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு வேஷ்டி – சேலை, இனிப்பு மற்றும் உணவு வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமர்,சிவா,நகர அவைத் […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







