• November 16, 2026

Month: October 2026

தூத்துக்குடி

தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை; உறவுக்கார வாலிபர் கைது 

தூத்துக்குடி 3-வது மைல், கந்தன் காலனி 3-வது தெருவைச் சேர்ந்த சித்திரைவேலின் மனைவி சசிகலா (வயது 45). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் சென்னையில் வசித்து வருகிறார். திருமணமான மகனும் தனியாக வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்திரைவேல் கேரளாவில் வேலை பார்த்து வருவதால், சசிகலா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இன்று 28.10.2026 மதியம் சுமார் 2.30 மணியளவில் அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், சசிகலாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். […]

கோவில்பட்டி

நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு

கோவில்பட்டி நகராட்சி 32வது வார்டு பாரதிநகர் கருமாரியம்மன் கோவில் தெருவில் கடந்த 2024ம் ஆண்டு நகராட்சி நிதியிலிருந்து பேவர் பிளாக் சாலை பணிகள் தொடங்கப்பட்டது/ ஆனால் இந்த சாலை  முழுமை பெறாமல் பாதியில் நிற்கிறது. சாலை பணிகள் ஆண்டு கணக்கில் கிடப்பில் போடப்பட்டதால் அப்பகுதியில் மழைநீரில் கழிவு நீர் கலந்து தேங்கி சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது, இதனால் இப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே பேவர் பிளாக் சாலை பணிகளை முழுமைபடுத்தி உடனடியாக செய்து தர […]

கோவில்பட்டி

காமநாயக்கன்பட்டியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு இயக்கம்

மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி ஆகஸ்ட் 17 முதல் நவம்பர் 18 ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன்படி வடக்கு வண்டானம் கிராமத்தில் அமைந்துள்ள பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம் சார்பில் கோவில்பட்டியை அடுத்த காமநாயக்கன்பட்டி பஸ்  நிலையத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் பவர்கிரிட் துணைபொது மேலாளர் சு.ராஜசேகரன், துணை மேலாளர் க.கார்த்திக் மற்றும் பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை பஸ்  நிலையம் […]

செய்திகள்

தூத்துக்குடி உள்பட 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மேம்பட்ட மின் ஆய்வகங்கள்; முதல்-அமைச்சர்

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டின் வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, ராணிப்பேட்டை, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தேனி, மதுரை, சேலம், கடலூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஈரோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள 30 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 5.10 கோடி ரூபாய் செலவில் Schneider Electric India Pvt. Ltd. நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள மேம்பட்ட மின் ஆய்வகங்களை முதல்-அமைச்சர் விஜய் இன்று 28.10.2026) சென்னை, […]

செய்திகள்

தேனி சிறையில் போலீசாரை தாக்க கைதிகள் பயன்படுத்திய கரண்டி மீட்பு; மேலும் 2

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் தேனி மாவட்ட சிறை அமைந்துள்ளது. இங்கு விசாரணை கைதிகள் அடைக்கப்படுகின்றனர். நேற்று முன்தினம் இரவு இந்த சிறையில் கைதிகள் சிலர் குழுவாக சேர்ந்து சிறைக்காவலர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதன்பின்னர் 17 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடி விட்டனர். இது பற்றிய தகவலின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கே.எஸ். பிரவீன் கவுதம் உத்தரவின்பேரில், தேக்கம்பட்டியில் போலீசார் குவிக்கப்பட்டனர். தப்பி ஓடிய கைதிகளை பிடிக்க மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கை […]

கோவில்பட்டி

இளையரசனேந்தல் அரசு பள்ளி மேலாண்மைக் குழு  பதவி ஏற்பு

கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழு  பதவி ஏற்பு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் மரிய செல்வி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் முருகசரஸ்வதி அனைவரையும் வரவேற்றார 2026-2028 ஆண்டிற்கான தலைவர் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர்  தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் உட்பட உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர், இரண்டு வருடங்களுக்கான பள்ளியின் வளர்ச்சிக்கு இக்குழுவின் பொறுப்புகளும் செயல்களும்  அறிவுறுத்தப்பட்டன.  பள்ளி மேலாண்மை […]

செய்திகள்

விருதுநகரில் பரபரப்பு: கணவரை எரித்து கொலை செய்த இளம்பெண்

 விருதுநகர் அல்லம்பட்டி வி.வி.ஆர். காலனியை சேர்ந்தவர் சங்கர்குரு (வயது 35). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சங்கரேசுவரி  (வயது 31). இந்த தம்பதிக்கு 12 வயதில் மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர். சங்கர்குரு மது குடித்துவிட்டு வீட்டுக்கு… வந்து சங்கரேசுவரியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கணவன்- மனைவி  இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வந்தனர். மகன், மகள் சங்கரேசுவரியின் பராமரிப்பில் இருந்தனர். இதையடுத்து குடும்பத்தினரின் […]

செய்திகள்

அர்னாப் புயல்: காகிநாடாவில் கனமழையினால் மரங்கள் சாய்ந்தன, மின் இணைப்பு துண்டிப்பு

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று முன் தினம் நிலவிய அர்னாப் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று நேற்று முன் தினம் மாலை 5.30 அளவில் தீவிர புயலாக மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று நேற்று முன் தினம் இரவு 11.30 மணி அளவில் மிக தீவிர புயலாக அதே பகுதிகளில் நிலவியது. நேற்று காலை 8.30 மணி அளவில் […]

செய்திகள்

முதியோர்களை வீட்டை விட்டு வெளியேற்றினால் 3 ஆண்டு சிறை; கேரளாவில் மசோதா தாக்கல்

நாட்டிலேயே முதல்முறையாக முதியோர்களை பாதுகாப்பதற்கான புதிய மசோதா கேரளம்  சட்டப்பேரவையில் அதிரடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பெற்ற பிள்ளைகளும், உறவினர்களும் முதியவர்களை பாரமாக நினைத்து கைவிடும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளது. இனி முதியோர்களை யாராவது துன்புறுத்தினாலோ அல்லது அலட்சியப்படுத்தினாலோ சட்டம் தன் கடமையை செய்யும். இந்த புதிய சட்டத்தின்படி: • உடல் அல்லது மன ரீதியாக முதியவர்களை துன்புறுத்துவது பெரும் குற்றம். • வலுக்கட்டாயமாக வீட்டை விட்டு வெளியேற்றினால் சிறை நிச்சயம். • முதியவர்களின் […]

கோவில்பட்டி

பெண்கள் காப்பகத்தில் உலக மனநல நாள் கொண்டாட்டம்

கோவில்பட்டியை அடுத்த முடுக்குமீண்டான்பட்டி கிராமத்தில் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் நடத்தும் பெண்கள் மனநல காப்பகத்தில் மனநல சீராய்வு குழுமம் திருநெல்வேலி சார்பில் இன்று உலக மனநல நாள் கொண்டாடப்பட்டது. காப்பக நிர்வாகி தேன்ராஜா அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக மனநல சீராய்வு குழுமம் தலைவரும், மாவட்ட நீதிபதி(பணி நிறைவு) கிங்ஸ்லி கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார்; மனநலம் குறித்து கிங்ஸ்லி கிறிஸ்டோபர் சிறப்புரையாற்றி, விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தும்,போட்டியில் வென்றவருக்கு பரிசுகளும் வழங்கினார். பியூலா கிங்ஸ்லி கிறிஸ்டோபர், மனநல […]