• November 16, 2026

Month: October 2026

கோவில்பட்டி

டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் : கோவில்பட்டி கோவிலில் சிறப்பு பூஜை

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்,. அவரது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன, இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு பொங்கல், வடை, கேசரி, இட்லி உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டன. மேலும், பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு காலை உணவு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டச் […]

கோவில்பட்டி

எஸ்.எஸ்.டி.எம்.கல்லூரியில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்

கோவில்பட்டி எஸ்.எஸ். டி.எம். கல்லூரியின் தேர்தல் எழுத்தறிவு மன்றம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக புதிய வாக்காளர்களிடையே  தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் “புதிய வாக்காளர்கள் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்” கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.  இந்த முகாம் கல்லூரிச் செயலாளர் கண்ணன் அனுமதியுடன்  கல்லூரி முதல்வர்   செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது. முகாமில் கோவில்பட்டி தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சுடலைமுத்து பாண்டியன், துணை வட்டாட்சியர் பொன்னம்மாள்  ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புதிய வாக்காளர்கள் […]

செய்திகள்

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் த.வெ.க. முன்னிலை

ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் த.வெ.க. முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் மதுராந்தகம், தாராபுரம்… தொகுதிகளில் EVM எந்திரங்களில் பதிவானவை எண்ணப்பட்டு வருகிறது. அந்த வாக்கு எண்ணிக்கையில் த.வெ.க. தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது….ஒவ்வொரு சுற்று முடிவிலும் தவெக வேட்பாளர்கள் அதிகவாக்குகள் பெற்று முநிலை பெற்று இருக்கிறார்கள். மதுராந்தகம் தொகுதி (சுற்று 8 ) மரகதம் குமாரவேல் – […]

கோவில்பட்டி

வனவிலங்குகள்’முகக்கவசம்’ அணிந்த கல்லூரி மாணவர்கள்

கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி) தாவரவியல் துறை மற்றும் இயற்கை கவாழ்த்துக்கள் ழகத்தின் சார்பாக 72-வது வனவிலங்கு வார விழா கொண்டாடப்பட்டது.கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வனவிலங்குகளின் முகக்கவசம் அணிந்து வனவிலங்குகளின் பாதுகாப்பு குறித்து பதாகைகளுடன் விழிப்புணர்வு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக விலங்குகளின் பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “விலங்குகள் பாதுகாப்பு – என்ற தலைப்பில் தாவரவியல் துறைத்தலைவர் பா. மகேஷ்குமார் சிறப்புரை ஆற்றினார்.இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள்,அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் பெயிண்டர் கொலை வழக்கில் 3 பேர் கைது

கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த சீனி என்பவரது மகன் பெருமாள் (வயது 31). பெயிண்டரான இவரது செல்போன் கடந்த சில தினங்களுக்கு முன்பு காணாமல் போனதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் சுப்பிரமணியபுரம் கல்கிடங்கு அருகே உள்ள நகராட்சி குப்பைக்கிடங்கு பகுதியில் பெருமாள் நடந்து சென்றபோது, அங்கு அமர்ந்திருந்த கருப்பசாமி(20), ரத்தினசாமி(20) மற்றும் பாலச்சந்தர்(23) ஆகியோரிடம் தனது செல்போன் திருட்டுபோனது குறித்து கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த 3 பேரும் […]

செய்திகள்

நகை திருட்டு சம்பவத்தில் தொடர்பா?  பெண் போலீஸ் ஏட்டு பணியிடைநீக்கம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சங்கரபாண்டியபுரம் தெருவை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது 50). பூ வியாபாரி. இவர் கடந்த மாதம் குடும்பத்துடன் வெளியூர் சென்றபோது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் திருட்டு போனது. இதுகுறித்து சங்கரலிங்கம் அளித்த புகாரின் பேரில் ராஜபாளையம் நகர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது ஒரு பெண் சங்கரலிங்கம் வீட்டில் இருந்து […]

செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் நாளை வாக்கு எண்ணிக்கை; வெற்றி யாருக்கு?

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் (தனி), திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் (தனி) ஆகிய தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் (அக்.6) இடைத்தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு பதவி ஏற்ற 4 மாதத்தில், இந்த இடைத்தேர்தல் வந்ததால், புதிய அரசை எடைபோடும் தேர்தலாக இது பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான 118 தொகுதிகள் த.வெ.க.வுக்கு கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ், […]

கோவில்பட்டி

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கையெழுத்து போட்டி

கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி) ஆங்கிலத் துறை (அரசு உதவி) சார்பில் “எழுத்தில் நேர்த்தி – கையெழுத்துக் கலையும் மாணவர் சாதனையும்” என்ற சிறப்பு நிகழ்வு  கல்லூரி கருத்தரங்கு அறையில் நடைபெற்றது. மாணவர்களின் கையெழுத்துத் திறன், படைப்பாற்றல், தன்னம்பிக்கை மற்றும் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. கையெழுத்துப் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களையும் பாராட்டும் வகையில் நிகழ்ச்சி அமைந்தது. இந்நிகழ்வில் கல்லூரி  செயலர் மமகேந்திரன், முதல்வர்  பாண்டியராணி, மற்றும் வேதியியல் துறைத் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் 25 கிலோ புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது ;கார் பறிமுதல் 

 கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் அருகில் உள்ள ஓடை அருகில்‌ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக காரில் வைத்திருந்த நபர் கைது. செய்யப்பட்டார். கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர்  மாரியப்பன் வழக்கு பதிவு செய்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக காரில் வைத்திருந்த கோவில்பட்டி ஊரணி பகுதியை சேர்ந்த செல்வம் மகன் பால்பாண்டியன் (43) என்பவரை கைது செய்தார். அவரிடமிருந்து 23 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் காரையும் பறிமுதல் செய்தார். தடை […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மும்மத பிரார்த்தனைகளுடன் செல்வமாதா ஆலய சப்பர பவனி 

கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தின் கிளை பங்கான புதுக்கிராமம் பரிசுத்த செல்வமாதா ஆலய திருவிழா செப்-29 தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து10 நாட்கள் ஆலயத்தில் திருப்பலிகளும், தியானம்,ஒப்புரவு அருட்சாதனம் மற்றும் பல நிகழ்வுகளுடன் திருவிழா நடைபெற்று வருகிறது. 9ம்நாள் திருவிழாவான நேற்று மாலை ஆலயத்தில்  பாளையங்கோட்டை மறைமாவட்ட செயலக முதல்வர்  சேவியர் அடிகளார் ,புனித சூசையப்பர் ஆலய பங்கு தந்தை அருள்ராஜ் அடிகளார், உதவி பங்குத்தந்தை குழந்தைராஜ் அடிகளார் இணைந்து திருப்பலி நிறைவேற்றினார்கள். பின்னர் அலங்கரிக்கப்பட்ட […]