கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கையெழுத்து போட்டி
Oplus_16908288
கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி) ஆங்கிலத் துறை (அரசு உதவி) சார்பில் “எழுத்தில் நேர்த்தி – கையெழுத்துக் கலையும் மாணவர் சாதனையும்” என்ற சிறப்பு நிகழ்வு கல்லூரி கருத்தரங்கு அறையில் நடைபெற்றது.
மாணவர்களின் கையெழுத்துத் திறன், படைப்பாற்றல், தன்னம்பிக்கை மற்றும் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. கையெழுத்துப் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களையும் பாராட்டும் வகையில் நிகழ்ச்சி அமைந்தது.

இந்நிகழ்வில் கல்லூரி செயலர் மமகேந்திரன், முதல்வர் பாண்டியராணி, மற்றும் வேதியியல் துறைத் தலைவரும், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர் உமாதேவி, கணிதவியல் துறை இணைப்பேராசிரியர் ரா.கிருஷ்ணவேணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மாணவர்களின் பங்கேற்பை பாராட்டிய சிறப்பு விருந்தினர்கள், “ஒவ்வொரு எழுத்தும் ஒரு கதையைச் சொல்கிறது; ஒவ்வொரு முயற்சியும் அங்கீகாரத்திற்குத் தகுதியானது” என்ற கருத்தை வலியுறுத்தி, மாணவர்கள் தங்களின் தனித்திறமைகளை தொடர்ந்து
வளர்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.
கையெழுத்துப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆங்கிலத் துறைத் தலைவர் மற்றும் உதவி பேராசியர்) ரா. சரவண செல்வகுமார் மற்றும் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர்கள் வித்யாலட்சுமி, தேன்மொழி ஆகியோர் செய்திருந்தனர்.







