கோவில்பட்டியில் 25 கிலோ புகையிலை பொருட்களுடன் ஒருவர் கைது ;கார் பறிமுதல்
Oplus_16908288
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் அருகில் உள்ள ஓடை அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக காரில் வைத்திருந்த நபர் கைது. செய்யப்பட்டார்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மாரியப்பன் வழக்கு பதிவு செய்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக காரில் வைத்திருந்த கோவில்பட்டி ஊரணி பகுதியை சேர்ந்த செல்வம் மகன் பால்பாண்டியன் (43) என்பவரை கைது செய்தார்.

அவரிடமிருந்து 23 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் காரையும் பறிமுதல் செய்தார். தடை செய்யப்பட்டது புகையிலை பொருட்கள் சப்ளை செய்தது யார்? இதான் பின்னணி யில் யார் இருக்கிறார்கள்?என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.







