கோவில்பட்டியில் மும்மத பிரார்த்தனைகளுடன் செல்வமாதா ஆலய சப்பர பவனி
Oplus_16908288

கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தின் கிளை பங்கான புதுக்கிராமம் பரிசுத்த செல்வமாதா ஆலய திருவிழா செப்-29 தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து10 நாட்கள் ஆலயத்தில் திருப்பலிகளும்,
தியானம்,ஒப்புரவு அருட்சாதனம் மற்றும் பல நிகழ்வுகளுடன் திருவிழா நடைபெற்று வருகிறது.
9ம்நாள் திருவிழாவான நேற்று மாலை ஆலயத்தில் பாளையங்கோட்டை மறைமாவட்ட செயலக முதல்வர் சேவியர் அடிகளார் ,புனித சூசையப்பர் ஆலய பங்கு தந்தை அருள்ராஜ் அடிகளார், உதவி பங்குத்தந்தை குழந்தைராஜ் அடிகளார் இணைந்து திருப்பலி நிறைவேற்றினார்கள்.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பரிசுத்த செல்வமாதா திருவுருவம் வைக்கப்பட்டு அருட்தந்தையர்களும், புதுக்கிராமம் சுடலை மாடசாமி கோவில் தலைவர் மகேஷ் பாலா ,கோயில் பூசாரி சோலைமுருகன்,
கோவில்பட்டி டவுன் பள்ளிவாசல் இமாம் முகமது ஜமீல் ஆகியோர் இணைந்து மும்மத பிராத்தனைகள் செய்து பவனியை தொட க்கி வைத்தனர்.
பவனியானது புதுக்கிராமம், கடலையூர் மெயின் ரோடு ,பங்களா தெரு தெரு வழியாக ஆலயம் வந்து சேர்ந்தது.இதில் ஏராளமான இறை மக்கள் ஜெபம் செய்தவாறு பவனியாக வந்தனர். பின்னர் ஆலயத்தில் அனைவருக்கும் அசனவிருந்து வழங்கப்பட்டது







