மாதவரம் பால் பண்ணையில் முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு


சென்னை, மாதவரம் ஆவின் பால் பண்ணையில், தினமும் 4 லட்சம் லிட்டர் முதல் 4.5 லட்சம் லிட்டர் வரை பால் உற்பத்தி செய்யப்படுகிறது… இங்கிருந்து, 45-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், லாரிகள் வாயிலாக சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு, பால் பாக்கெட் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது சென்னையில் ஆவின் பால் குறைவாக வினியோகம் செய்யப்படுவதால் பொதுமக்களுக்கு தேவையான அளவு கிடைக்கவில்லை. கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுவதால் பொதுமக்கள் தனியார் பாலை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. ஆவின் பால் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை மாதவரம் பால் பண்ணையில் முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு செய்தார்,.. தொடர்ந்து பால் கொள்முதல் மற்றும் விநியோகம் குறித்து அதிகாரிகளிடம் முதல்-அமைச்சர் விஜய் விரிவாக கேட்டறிந்தார். தொடர்ந்து ரூ.2.23 கோடியில் கட்டப்பட்டுள்ள ஆவின் மைய ஆய்வக துணை கட்டிடத்தை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
மேலும் மாதவரம் பால்பண்ணை வளாகத்தில் கட்டப்படும் புதிய பண்ணையின் கட்டுமானப் பணிகளை முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு செய்தார். மாதவரம் பால் பண்ணையில் விற்பனைக்காக ஒரு நாளைக்கு 3 முதல் 3.60 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தப்படுகிறது. 3.75 ஆயிரம் லிட்டர் பாலை குளிர்விக்கும் அறைகள், 80 மெட்ரிக் டன் பால் பவுடர் இருப்பு அறைகள் உள்ளன.
இவற்றை முதல் அமைச்சர் விஜய் பார்வையிட்டார். மேலும் பாலின் ஹ தரம் பரிசோதனை செய்வதை பார்த்து விவரங்கள் கேட்டறிந்தார்.,







