போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூபாய் 1,08,000/- அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு. வழங்கி உள்ளது,

கடந்த 2021ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 12 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட நாசரேத், முதலைமொழி பகுதியைச் சேர்ந்த சுடலை மகன் ராஜமாணிக்கம் (48/26) என்பவரை ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மேற்படி நீதிமன்ற நீதிபதி முருகன் நேற்று (06.10.2026) எதிரி ராஜமாணிக்கத்தை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூபாய் 1,08,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.







