மதுராந்தகம்,தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர், கம்யூனிஸ்டுகள் என 5 முனை போட்டி நிலவி வருகிறது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் காலை 9 மணிவரை பதிவான வாக்குகள் சதவீதம் வெளியாகியுள்ளது.

அதன்படி, காலை 9 மணி நிலவரப்படி மதுராந்தகத்தில் 15.99 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோல், தாராபுரத்தில் 17.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
காலை 11 மணி அளவில் மதுராந்தகம் தொகுதியில் 35. 55 சதவீத வாக்குப்பதிவு,தாராபுரம் தொகுதியில் 37.28 சதவீதம் வாக்குபதிவாகியுள்ளது.
மதியம் ஒரு மணி நிலவரப்படி தாராபுரத்தில் 55 சதவீதமும் மதுராந்தகத்தில் 54 சதவீதமும் வாக்கு பதிவாகி இருந்தது.
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70.31 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. 2026 சட்டமன்ற தேர்தலின்போது தாராபுரத்தில் பகல் 3 மணி நிலவரப்படி 71.15 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பகல் 3 மணி நிலவரப்படி 68.08 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
2026 சட்டமன்ற தேர்தலின்போது தாராபுரத்தில் பகல் 3 மணி நிலவரப்படி 71.15 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன
இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 9ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.







