கோவில்பட்டியில் காரில் கடத்தி வந்த 600 கிலோ குட்கா சிக்கியது ; 2 பேர் கைது
Oplus_16908288
கோவில்பட்டி வழியாக காரில் புகையிலை பொருள் கள் கடத்தி வரப்படுவதாக காவல் நிலைய
மேற்கு
போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இளையரசனேந்தல் சாலையில் உள்ள காவல் துறை சோதனைச்சாவடி
யில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந் தனர்.
அப்போது அந்த வழி யாக வந்த வெள்ளை நிற சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் தடை செய்யப்பட்ட klp பிராண்ட் குட்கா புகை யிலை பொருட்கள் 53 மூட் டைகளில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.மொத்தம் சுமார் 600 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 10லட்சம் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து காரில் இருந்த எப்போதும்வென் றான் கண்ணக்கோட்டை வடக்கு தெருவைச் சேர்ந்த வேல்முரு கன்(49), சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா மேச்சேரி வொர்க் ஷாப் காலனி யைச் சேர்ந்த ரமேஷ் (47) ஆகிய 2
பேரைபோலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம்
இருந்து சுமார் 600 கிலோ குட்கா, 2 செல்போன்கள், கார் மற்றும் ரூ.7 லட்சத்து 57 ஆயிரத்து 500 ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்த னர்.
மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கண்ட வழக்குகளில்
சம்பந்தப்பட்ட நபர்களின் நிதி தொடர்பான விசாரணை தீவிரமாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சம் பந்தப்பட்ட நபர்களின் வங் கிக் கணக்கு விவரங்கள் மற் றும் நிதிப் பரிவர்த்தனை தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு
செய்யப்பட்டு வருகின்றன. மேலும், சட்ட விதிகளுக்கு உட்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்கு களை முடக்கம் செய்வதற் கான நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப் பட்டு வருவதாக காவல்து றையினர் தெரிவித்தனர்.







