பொதுத்தேர்தலைவிட இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு குறைவுக்கு என்ன காரணம்?
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.வில் இணைந்தனர்.
இதையடுத்து மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு நேற்று நடைபெற்றது,.
மதுராந்தகம் தொகுதியில் 86.26 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது, ஆனால் கடந்த பொதுத்தேர்தலில் 93.22 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. எனவே கடந்த பொதுத்தேர்தலைவிட இப்போது 6.96 சதவீத வாக்குகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் தாராபுரத்திலும் கடந்த பொதுத்தேர்தலில் பதிவானதைவிட இந்த இடைத்தேர்தலில் 9.61 சதவீதம் குறைந்துள்ளது..
இரண்டு தொகுதிகளிலும் இளைஞர்கள், மாணவர்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் வாக்கு சதவீதம் குறைந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் பல மாணவர்கள் சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் படிப்பதால், அவர்களும் வாக்களிக்கவில்லை. இதனால்தான் வாக்கு சதவீதம் குறைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுராந்தகம் தொகுதி வாக்கு எண்ணும் மையமான ஆத்தூரில் உள்ள சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையத்திlல் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. தாராபுறம் தொகுதி வாக்குபதிவு மின்னணு இயந்திரங்கள் . திருப்பூர் எல்.ஆர்.ஜி. மகளிர்… கல்லூரியில் வைக்கபப்ட்டுள்ளன,
இரண்டு இடங்களிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரு தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் (9-ந்தேதி) நடக்கிறது….







