வனவிலங்குகள்’முகக்கவசம்’ அணிந்த கல்லூரி மாணவர்கள்
கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி) தாவரவியல் துறை மற்றும் இயற்கை கவாழ்த்துக்கள் ழகத்தின் சார்பாக 72-வது வனவிலங்கு வார விழா கொண்டாடப்பட்டது.
கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வனவிலங்குகளின் முகக்கவசம் அணிந்து வனவிலங்குகளின் பாதுகாப்பு குறித்து பதாகைகளுடன் விழிப்புணர்வு நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக விலங்குகளின் பாதுகாப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “விலங்குகள் பாதுகாப்பு – என்ற தலைப்பில் தாவரவியல் துறைத்தலைவர் பா. மகேஷ்குமார் சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள்,அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை தாவரவியல் துறைத் தலைவர் பா.மகேஷ்குமார் மற்றும் இயற்கை கழக ஒருங்கிணைப்பாளர் க. மாரிச்சாமி ஆகியோர் செய்திருந்தனர்.







