டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் : கோவில்பட்டி கோவிலில் சிறப்பு பூஜை
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்,. அவரது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன,
இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு பொங்கல், வடை, கேசரி, இட்லி உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டன. மேலும், பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு காலை உணவு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்டச் செயலாளர் அயன் சின்னத்துரை, தெற்கு மாவட்டத் தலைவர் நாட்டாமை சிவபெருமாள், மத்திய மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.பி.ஆர். இசக்கிவேல், மத்திய மாவட்ட அமைப்புச் செயலாளர் பாலசுப்பிரமணியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்,







