எஸ்.எஸ்.டி.எம்.கல்லூரியில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்
கோவில்பட்டி எஸ்.எஸ். டி.எம். கல்லூரியின் தேர்தல் எழுத்தறிவு மன்றம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக புதிய வாக்காளர்களிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் “புதிய வாக்காளர்கள் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்” கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த முகாம் கல்லூரிச் செயலாளர் கண்ணன் அனுமதியுடன் கல்லூரி முதல்வர் செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
முகாமில் கோவில்பட்டி தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சுடலைமுத்து பாண்டியன், துணை வட்டாட்சியர் பொன்னம்மாள் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புதிய வாக்காளர்கள் இணைய வழியாகவும், படிவம் 6 மூலமாகவும் எவ்வாறு வாக்காளராகப் பதிவு செய்து கொள்வது என்பது குறித்து விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்தனர். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான நடைமுறைகள், தேவையான ஆவணங்கள், விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முறை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான வழிமுறைகள் ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறுவதன் முக்கியத்துவம், தேர்தலில் வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயகக் கடமை என்பதன் அவசியம், வாக்குரிமையை முறையாகப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் ஆகியவை குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இம்முகாமில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு, வாக்காளர் பதிவு தொடர்பான பல்வேறு தகவல்களைப் பெற்றனர். இச்சிறப்பு முகாமின் மூலம் மொத்தம் 70 மாணவர்கள் பயனடைந்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களான உதவிப் பேராசிரியர்கள் ஜெய்சிங்கராஜ் மற்றும் சுசிலா ஆகியோர் செய்திருந்தனர்.







