• November 16, 2026

Month: October 2026

செய்திகள்

வீரபாண்டிய கட்டபொம்மன் 227-வது நினைவு நாள்: கயத்தாறு மணிமண்டபத்தில் 16-ந்தேதி அதிமுக சார்பில்

அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்பதற்காக ஆங்கிலேய ஆதிக்கத்தை துணிச்சலாக எதிர்த்தவரும்; வீரமும், விவேகமும் நிறைந்தவருமான வீரபாண்டிய கட்டபொம்மன் 227-ஆவது நினைவு நாளையொட்டி 16.10.2026 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் அ மணிமண்டபத்தில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது,.அதிமுக அமைப்பு செயலாளர்கள் கே.டி.. ராஜேந்திரபாலாஜி, […]

தூத்துக்குடி

வீடு புகுந்து 14 பவுன் நகைகள் திருட்டு: பெண் உள்பட 3 பேர்

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கரப்பேரி, ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் வீரமூர்த்தி (வயது 71). இவர் கடந்த 27.9.2026 அன்று தனது வீட்டின் யாரோ மர்ம நபர்கள் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த தங்க நகைகள் திருட்டு போனதாக சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வீரமூர்த்தி வீட்டில் தங்க […]

செய்திகள்

செயற்கை மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல்; எடப்பாடி பழனிசாமி

சேலம் ஓமலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- இடைத்தேர்தலில் பெரிய வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெறவில்லை. ஜனநாயக முறைப்படி தவெக தேர்தலை சந்திக்கவில்லை. பணபலம், அதிகார பலத்தால்தான் தவெக வெற்றி பெற்றுள்ளது. இடைத்தேர்தலில் தவெகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களே கூறினர். தவெக கூட்டணிக்கு ஆதரவளித்த கம்யூனிஸ்ட் கட்சிகளே தவெகவை எதிர்த்து இடைத்தேர்தலில் போட்டியிட்டன. ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35க்கு கொள்முதல் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் எந்த […]

தூத்துக்குடி

அமைச்சர் ஸ்ரீநாத்  உதவியாளர்கள் 2 பேர் திடீர் நீக்கம்

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ.-வும், மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத்திற்கு அரசியல் உதவியாளராக ஸ்ரீதரும், சிறப்பு உதவியாளராக மீன்வளத்துறையில் பணிபுரிந்த காத்தவராயனும் நியமிக்கப்பட்டிருந்தனர். தூத்துக்குடி மாவட்ட கருவூல அலுவலகத்தில் பணிபுரிந்த சுப்பையா இளநிலை உதவியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அமைச்சரின் பயணத் திட்டத்தில் குளறுபடி செய்தல், அமைச்சரின் பெயரைப் பயன்படுத்தி வசூலில் ஈடுபடுதல் மற்றும் மனு அளிக்க வரும் பொதுமக்களையும் அதிகாரிகளையும் அமைச்சரைச் சந்திக்கவிடாமல் தடுத்தல் எனத் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்த உதவியாளர்கள் மீது எழுந்தன. […]

செய்திகள்

பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற  கோவில்பட்டி மாணவருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்ட தூத்துக்குடி மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான பளுதூக்கும் போட்டியில் கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வரும் மாணவர் . ரமணா, 95 கிலோ எடைப் பிரிவில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்துத் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார். மாணவரின் இந்தச் சாதனையைப் பாராட்டி, பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் துணை முதல்வர் இந்துமதி மாணவர் ரமணாவுக்குச் […]

செய்திகள்

ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 35-க்கு  கொள்முதல் செய்வது ஏன்? அமைச்சர் நிர்மல்

தமிழக மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-  ரூ 35 -க்கு மின்சாரத்தை கொள்முதல் செய்வது என்பது குறுகிய கால ஏற்பாடுதான். நிரந்தரம் இல்லை. 15 நாட்களுக்கு மட்டும் வாங்க போகிறோம். இதற்காக ரூ 5 கோடி மட்டுமே கூடுதல் செலவு ஆகும். இந்த ரூ 35-க்கு மின்சாரம் கொள்முதல் செய்வதால் 1 லட்சம் கோடி இழப்பு என வதந்தி பரப்ப வேண்டாம். அதிக விலை கொடுத்து வாங்கக் […]

கோவில்பட்டி

பள்ளிக்கூட மாணவர்களுக்கான கணித வினாடி- வினா போட்டி

கோவில்பட்டி  கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி) யில் 11 மற்றும் 12 வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கல்லூரியின் செயலர் ப. மகேந்திரன் வழிக்காட்டுதலின் படி தூத்துக்குடி மாவட்ட அளவிலான கணித வினாடி வினாப் போட்டி, கணிதத்துறை சார்பில் நடத்தப்பட்டது. இப்போட்டியினை கல்லுாரியின் முதல்வர் அ. பாண்டியராணி அவர்கள் தலைமை உரையாற்றி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கணிதத்துறை இணைப்பேராசிரியர்  இரா. கிருஷ்ணவேணி வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். உதவிப்பேராசிரியர் நா. சண்முகப்பிரியா வரவேற்புரை வழங்கினார். கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்பா […]

செய்திகள்

அமைச்சர் ஆனந்த்துடன் துரை வைகோ எம்.பி.சந்திப்பு; 3 கோரிக்கை கடிதம் வழங்கினார்

மதிமுக திருச்சி தொகுதி எம்.பி,.துரை  வைகோ   வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர். என். ஆனந்த்தை  அவரது இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 11 மணிக்கு   நேரில் சந்தித்து 3 முக்கிய கோரிக்கை கடிதங்களை வழங்கினேன். முதலாவதாக, தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ், கிராமப்புற ஏழை, எளிய மக்களின் வாழ்வாதார முன்னேற்றம், வறுமை ஒழிப்பு மற்றும் தொழில்முனைவு மேம்பாட்டிற்காகச் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் […]

செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய்,தனி விமானம் மூலம் ஆந்திரா சென்றார்

தமிழக முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்திப்பதற்காக இன்று விஜயவாடா சென்றார். இதற்காக மதியம் 2.30 மணிக்கு சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்ட முதல்-அமைச்சர் விஜய், சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் ஆந்திரா புறப்பட்டுசென்றார். மாலை 4 மணிக்கு விஜயவாடா விமான நிலையம் அடைந்தார்.தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது,விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் சூரிய ஒளி மின் திட்ட  சிறப்பு முகாம்; நாளை மாலை நடக்கிறது

கோவில்பட்டி நகர் பகுதியில் உள்ள வீட்டு மின் இணைப்பு நுகர்வோர்கள் , பிரதம மந்திரி சூரியஒளி மின் திட்டத்தை பயன்படுத்தி பலன் பெறுவது தொடர்பான  சிறப்பு முகாம் நாளை  (புதன் கிழமை) நடக்கிறது,’ கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே  உள்ள காந்தி மண்டபத்தில் மாலை 3 மணி முதல் 6 மணி வரை முகாம் நடக்கிறது.இம்முகாமில் வீட்டு மின் நுகர்வோர் சோலார் மின் திட்டத்திற்கு செல்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து நுகர்வோர்கள் அறிந்து கொள்வதற்கு உரிய […]