அமைச்சர் ஸ்ரீநாத் உதவியாளர்கள் 2 பேர் திடீர் நீக்கம்
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ.-வும், மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத்திற்கு அரசியல் உதவியாளராக ஸ்ரீதரும், சிறப்பு உதவியாளராக மீன்வளத்துறையில் பணிபுரிந்த காத்தவராயனும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
தூத்துக்குடி மாவட்ட கருவூல அலுவலகத்தில் பணிபுரிந்த சுப்பையா இளநிலை உதவியாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அமைச்சரின் பயணத் திட்டத்தில் குளறுபடி செய்தல், அமைச்சரின் பெயரைப் பயன்படுத்தி வசூலில் ஈடுபடுதல் மற்றும் மனு அளிக்க வரும் பொதுமக்களையும் அதிகாரிகளையும் அமைச்சரைச் சந்திக்கவிடாமல் தடுத்தல் எனத் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்த உதவியாளர்கள் மீது எழுந்தன.
இதையடுத்து, இதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக காத்தவராயன், சுப்பையா ஆகியோர் நேற்று அந்தப் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவைப் பொதுத்துறை செயலர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ளார்.







