முதல்-அமைச்சர் விஜய்,தனி விமானம் மூலம் ஆந்திரா சென்றார்
தமிழக முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்திப்பதற்காக இன்று விஜயவாடா சென்றார். இதற்காக மதியம் 2.30 மணிக்கு சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்ட முதல்-அமைச்சர் விஜய், சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் ஆந்திரா புறப்பட்டுசென்றார்.
மாலை 4 மணிக்கு விஜயவாடா விமான நிலையம் அடைந்தார்.தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது,விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படும் தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், அங்கிருந்து 30.5 கி.மீ. தொலைவில் உள்ள கனக துர்கா கோவிலுக்கு காரில் செல்கிறார்

.
மாலை 4.55 மணிக்கு கோவிலுக்கு சென்ற அவர், மாலை 5 மணி முதல் 5.45 மணி வரை நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தார். பின்னர், அங்கிருந்து மாலை 5.45 மணிக்கு காரில் புறப்பட்டு அவர் மாலை 6 மணிக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இல்லத்தை அடைந்தார். ஒரு மணி நேரம் அங்கிருக்கும் முதல்-அமைச்சர் விஜய், கோதாவரி – காவிரி ஆறு இணைப்புத் திட்டம் மற்றும் கிருஷ்ணா நீரை திறந்துவிடுவது குறித்து அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுடன் பேசுகிறார்.
இரவு 7.10 மணிக்கு சந்திரபாபு நாயுடு இல்லத்தில் இருந்து புறப்படும் முதல்-அமைச்சர் விஜய், உத்சவ் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.







