பள்ளிக்கூட மாணவர்களுக்கான கணித வினாடி- வினா போட்டி
Oplus_16908288
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி) யில் 11 மற்றும் 12 வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கல்லூரியின் செயலர் ப. மகேந்திரன் வழிக்காட்டுதலின் படி தூத்துக்குடி மாவட்ட அளவிலான கணித வினாடி வினாப் போட்டி, கணிதத்துறை சார்பில் நடத்தப்பட்டது.
இப்போட்டியினை கல்லுாரியின் முதல்வர் அ. பாண்டியராணி அவர்கள் தலைமை உரையாற்றி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கணிதத்துறை இணைப்பேராசிரியர் இரா. கிருஷ்ணவேணி வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். உதவிப்பேராசிரியர் நா. சண்முகப்பிரியா வரவேற்புரை வழங்கினார்.

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்பா நாடார் மேல்நிலைப்பள்ளி முதுகலை கணிதவியல் ஆசிரியர் முகேஷ் குமார் வினாடி வினாப் போட்டியை நடத்தி கொடுத்தார். இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12 வகுப்பு மாணவ மாணவியர்கள் அடங்கிய 24 குழுக்கள், 13 பள்ளிகளில் இருந்து கலந்து கொண்டனர்.
போட்டியின் போது கணிதத்திறன் சார்ந்த கேள்விகள் மற்றும் உயர்கல்வி படிப்பை தேர்ந்தெடுக்கும் போது ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள பயிற்சி வழங்கினார். இதன் மூலம் வினாடி வினா போட்டியில் கலந்து கொண்ட 13 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பயனடைந்தனர்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் முதல் பரிசாக ரூ.2000/- இரண்டாம் பரிசாக ரூ.1500/- காசோலை வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உதவிப்பேராசிரியர் ஹ.மு. சுல்தான் அஃதர் நன்றி கூறினார்.







