கோவில்பட்டியில் சூரிய ஒளி மின் திட்ட சிறப்பு முகாம்; நாளை மாலை நடக்கிறது
கோவில்பட்டி நகர் பகுதியில் உள்ள வீட்டு மின் இணைப்பு நுகர்வோர்கள் , பிரதம மந்திரி சூரியஒளி மின் திட்டத்தை பயன்படுத்தி பலன் பெறுவது தொடர்பான சிறப்பு முகாம் நாளை (புதன் கிழமை) நடக்கிறது,’
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி மண்டபத்தில் மாலை 3 மணி முதல் 6 மணி வரை முகாம் நடக்கிறது.
இம்முகாமில் வீட்டு மின் நுகர்வோர் சோலார் மின் திட்டத்திற்கு செல்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து நுகர்வோர்கள் அறிந்து கொள்வதற்கு உரிய தகவல்கள் அளிக்கப்படும்.

மேலும், வீடுகளில் சூரிய ஒளி மின் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாநில மற்றும் மத்திய அரசு மானியம் பெறுவது தொடர்பாக வங்கி அலுவலர்கள் மூலம் விளக்கங்கள் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே வீட்டு மின் இணைப்பு நுகர்வோர் மேற்படி மின் திட்ட சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் (பொ) குருசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.







