வீரபாண்டிய கட்டபொம்மன் 227-வது நினைவு நாள்: கயத்தாறு மணிமண்டபத்தில் 16-ந்தேதி அதிமுக சார்பில் மரியாதை செலுத்துவோர் விவரம் அறிவிப்பு
அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்பதற்காக ஆங்கிலேய ஆதிக்கத்தை துணிச்சலாக எதிர்த்தவரும்; வீரமும், விவேகமும் நிறைந்தவருமான வீரபாண்டிய கட்டபொம்மன் 227-ஆவது நினைவு நாளையொட்டி 16.10.2026 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் அ மணிமண்டபத்தில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது,.
அதிமுக அமைப்பு செயலாளர்கள் கே.டி.. ராஜேந்திரபாலாஜி, எஸ்.பி, சண்முகநாதன்
வர்த்தக அணிச் செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன் ,கழக அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை. கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர், ,விருதுநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பி. ஜெயபெருமாள்
உள்ளிட்டோர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்துவார்கள்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கழக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், தூத்துக்குடி வடக்கு (பொறுப்பு) மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி,. சண்முகநாதன் செய்திடுவார்.
போற்றுதலுக்குரிய வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்,







