கோவில்பட்டி விஸ்வகர்ம உயர்நிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி
கோவில்பட்டியில் விஸ்வகர்ம உயர்நிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சி தொடக்க நிகழ்ச்சிக்கு விஸ்வகர்ம மகாஜன சங்கத் தலைவர் எஸ்.எம் பாலமுருகேசன் தலைமை தாங்கினார்,, விஸ்வகர்ம மகாஜன சங்கம் பொருளாளர் சக்தி முருகேஷ், துணைத் தலைவர், சண்முகவேல், துணைச் செயலாளர், அந்தோணிராஜ். ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

விஸ்வகர்ம உயர்நிலைப் பள்ளி மேலாளர் பாலசுப்பிரமணியன் ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
கண்காட்சியில் பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் திறமையை வெளிப் படுத்தும் விதமாக சந்திராயன் 4, எரிமலை, காற்றாலை, பசுமை வீடு, 3டி, சோலார், இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு அறிவியல் தொடர்பான செயல்முறைகளை கண்காட்சிகளில் காட்சிக்கு வைத்து விளக்கம் அளித்தனர்,
. நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியர் பாண்டிகுமார், மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கிய அறிவியல் ஆசிரியர்கள் லதாதேவி, ராஜலட்சுமி ஆகியோர் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்களைப் பாராட்டி பரிசு வழங்கினர்.







