காதலியின் தந்தையை வெட்டிக் கொன்ற வாலிபர்; போலீஸ் விசாரணை
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பூனம்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 48 வயது). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பாலகுரு (42 ). இவர்களுடைய மகள் ஆர்த்தியும் (23 ), சித்தாலம்புத்தூர் பகுதியை சேர்ந்த டிரைவர் தமிழழகன் (34 ) என்பவரும் காதலித்து வந்தனர். \
இவர்களின் காதலுக்கு ஆர்த்தியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து மகளை கண்டித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஈஸ்வரன் வீட்டு ஜன்னல் வழியாக தமிழழகன் தனது செல்போன் மூலம் லைட் அடித்து பார்த்துள்ளார்.

இதை கவனித்த ஈஸ்வரன் வெளியே ஓடிவந்தார். அவரை பார்த்ததும் தமிழழகன் அங்கிருந்து தனது காரில் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஈஸ்வரன், அவருடைய மனைவி பாலகுரு இருவரும் பைக்கில் தமிழழகன் வீட்டுக்கு சென்றனர்.
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஈஸ்வரன், தான் கொண்டு வந்த அரிவாளை எடுத்து தமிழழகன் தலையில் வெட்டினார்.. இதனால் ஆத்திரம் அடைந்த தமிழழகன் அந்த அரிவாளை பறித்து ஈஸ்வரனை சரமாரியாக வெட்டியதில் . ஈஸ்வரன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அவருடைய மனைவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ஈஸ்வரனை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது. இந்த கொலை குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி தமிழழகன் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஏற்கனவே அரிவாள் வெட்டில் காயம் அடைந்திருந்த தமிழழகன், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ,மேலும் விசாரணை நடந்து வருகிறது,.







