உரிய நேரத்தில் பொதுக்குழுவை எடப்பாடி பழனிசாமி கூட்டுவார்;அக்ரி கிருஷ்ணமூர்த்தி
கோப்பு படம்
சட்டமன்ற அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் அதன் பிறகு மாண்புமிகு அம்மா அவர்களால் எகு கோட்டையாக மாற்றப்பட்ட இயக்கம்.
அந்த இருபெரும் தலைவருடைய மறைவிற்குப் பின்னால், இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்திந்திய அதிமுக கட்டுக்கோப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்திலே எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. ஒரு சிலர் தங்களுடைய கருத்துக்களை பொதுச் செயலாளருடைய கவனத்திற்கு நேரடியாக வந்து சொன்னால் நிச்சயமாக அவருடைய கருத்துக்களையும் அண்ணன் எடப்பாடி பழனிசாமி கேட்டு நிச்சயமாக நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை இந்த நேரத்திலே நான் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணன் சி வி சண்முகம் நேற்றைய தினம் பேட்டி கொடுக்கின்ற பொழுது கூட இடைத்தேர்தலில் அனைத்திந்திய அதிமுக தோல்வி அடைந்து விட்டது. நான் மனவேதனை அடைகிறேன் என்று சொல்லி இருக்கிறார். மரியாதைக்குரிய அண்ணன் சிபி சண்முகம் விழுப்புரம் மாவட்ட துணை செயலாளராக இருந்த பொழுது அமைச்சராக இருந்த பொழுது 2019 ஆம் ஆண்டு 2019 ஆம் ஆண்டு விக்கிரவாண்டி தொகுதியிலே சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது.
அன்றைய தினம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தது. அண்ணன் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தார். அந்த அமைச்சரவையிலே அண்ணன் சிவி சண்முகம் அமைச்சராக இருந்தார். விழுப்புரம் மாவட்ட கலகத்தினுடைய செயலாளராக இருந்தார. அந்த தொகுதியிலே அதிமுக 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
எனவே இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சி தான் வெற்றி பெறும் என்ற ஒரு சூழ்நிலை தமிழகத்தில் இருந்து கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையிலேயே தான் இன்றைக்கு மதுராந்தகம் தொகுதியிலே பத்தாயிரம் வாக்குகளை மட்டுமே முதலாக பெற்று வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
ஏற்கனவே 2026 பொது தேர்தலில் அந்த இடத்திலேயே தவெக தனியாக போட்டியிட்ட பொழுது பெற்ற வாக்குகள் 62,000 இன்றைக்கு அவர்கள் பல்வேறு கட்சிகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளை இணைத்துக்கொண்டு அவர்கள் பெற்ற வாக்குகள் 72 ஆயிரம் மட்டுமே பத்தாயிரம் வாக்குகளை மட்டுமே அவர்கள் கூடுதலாக பெற்று இருக்கிறார்கள்.

எனவே இது அவர்களுக்கு ஒரு பெரிய வெற்றி அல்ல முதலமைச்சராக இருந்த விஜய் அவர்கள் ஐந்து நிமிடம் நான் பேசினாலே கொத்து புரோட்டா போட்டு விடுவேன் என்று கொளத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார் ஐந்து நிமிடம் வந்தாலே போதும் என்றார். ஆனால் இந்த மதுராந்தகம் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒவ்வொரு தொகுதிகளிலேயும் இரண்டு நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார் .மதுராந்தகத்தில் முதல் நாள் வந்து பேசினார் .அதன் பிறகு வந்து 40 இடங்களுக்கு மேலாக பல்வேறு இடங்களில் ரோட் ஷோ நடத்துகிறேன் என்று தெருத்தெருவாக வந்தார்.
ஹெலிகாப்டரில் வந்தார்.. மாட்டு வண்டியிலே வந்தார்.. ரேக்ளாவண்டியிலே வந்தார்.. தென்னை மரம் விவசாயத்திலே இறங்கி டிராக்டர் ஓட்டினார்.. முருங்கை மரத்தில் ஏறினார்.. இன்னும் என்னென்ன ஆடு மேய்த்தார்.. மாடு மேய்த்தார்.. இப்படி பல்வேறு செயற்கையான முறையிலே செய்கைகளை செய்து மக்களை கவர வேண்டும் என்று ஒரு செயற்கையான வெற்றியை தற்காலிக வெற்றியைத் தான் இன்றைக்கு இந்த அரசு பெற்றிருக்கிறது என்பதை இந்த நேரத்திலே நான் சொல்லிக் கொள்கிறேன்.
அதிமுகவில் எந்த பிரச்சினையும் இல்லை. பணியாற்றிக் கொண்டிருக்கின்ற மாவட்ட கழக செயலாளர் தலைமைக் கழக நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் நகர கழகத்தினுடைய செயலாளர்கள், பேரூர் கழகத்தினுடைய செயலாளர்கள் கிளைக் கழகத்துடைய செயலாளர்கள் எல்லாம் ஒற்றுமையாக இந்த இயக்கத்திலே எடப்பாடி பழனிசாமி தலைமையிலே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. மேலும் நிர்வாகிகள் ஆலோசனையின் பேரில் பொதுக்குழு கூட்டத்திட்டமிடப்படும்.
சி.வி.சண்முகம் , எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்துங்கள். உங்கள் அனைவரையும் அரவணைத்து செல்ல எடப்பாடி பழனிசாமி தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதிமுகவை காப்பாற்ற எந்த தியாகத்தையும் செய்ய எடப்பாடி பழனிசாமி தயாராகவே உள்ளார். உரிய நேரத்தில் பொதுக்குழுவை இபிஎஸ் கூட்டுவார். சிவி சண்முகம் உள்ளிட்டோர் கருத்துகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.







