கோவில்பட்டி பாண்டவர்மங்கலத்தில் இந்திய தத்துவ அறிஞரும்,பொருளாதார வல்லுநருமான பண்டிட் தீனதயாள் உபாத்யாயா 111 -வது பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு திட்டங்குளம் மகளிர் மன்ற உறுப்பினர் ரஞ்சிதமணி தலைமை தாங்கினார். பாண்டவர் மங்கலம் கஸ்தூரிபாய் காந்திஜி மகளீர் மன்ற தலைவி முருகலட்சுமி முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட இளையோர் மை பாரத் கேந்திரா மாவட்ட அலுவலர் மதுமிதா நோக்க உரை ஆற்றினார்.ஓய்வு பெற்ற நூலகர் சிவகுமார் அனைவரையும் வரவேற்றார். ஓய்த பெற்ற தலைமை ஆசிரியரும் கஸ்தூரிபாய் காந்திஜி […]
கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி சார்பாக தென் மண்டல அளவிலான சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான ஆண்கள் ஆக்கி போட்டி மூன்று நாட்கள் நடைபெற்றது இப்போட்டிகள் 14 வயது 17 வயது 19 வயது உட்பட்டவருக்காக மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டன மொத்தம் 47 அணிகள் கலந்து கொண்டு விளையாடின போட்டிகள் நாக் அவுட் சுற்றுகளாக நடைபெற்று அரை இறுதி போட்டி மட்டும் லீக் சுற்றுகளாக நடத்தப்பட்டன லீக் சுற்றின் முடிவில் அதிக புள்ளிகள் பெறும் அணிகளை வைத்து முதல் […]
அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்; முதல்-அமைச்சர் விஜய்
தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் எடையில், ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக த.வெ.க. அறிவித்தது. இந்த திட்டத்தை மதுரையில் தொடங்கி வைக்க முதல்-அமைச்சர் விஜய் முடிவு செய்தார். இதற்காக முதல் அமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனிவிமானத்தில் மதுரைக்கு வந்தார். மதுரை விமான நிலையத்தில் முதல் அமைச்சர் விஜய்க்கு அமைச்சர்கள், அதிகாரிகள், தவெக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் இருந்து மதுரை ராஜாஜி அரசு […]
கோவில்பட்டி ரெயில் நிலையம் புதுப்பிக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்; கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு
கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமையில் நடந்தது.தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு மேரிஷீலா முன்னிலை வகித்தார். கோவில்பட்டி ரெயில் நிலைய புதுப்பிக்கும் கட்டுமான பணிகளை துரிதப்படுத்த வேண்டும். இரண்டாவது நடை மேடையில் பயணிகளின் பாதுகாப்பிற்கு முழுமையான மேற்கூரையுடன் செட் அமைக்க வேண்டும். கொரோனா காலத்தில் கோவில்பட்டிக்கு வந்து சென்ற தற்போது நிறுத்தப்பட்டுள்ள ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும். கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு குறைந்தது ஐந்து […]
வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் செப்டம்பர் 28 முதல் 30-ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த 3 நாள் வங்கி வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள். சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இந்த முடிவை அறிவித்துள்ளது.. வாரத்தில் இரண்டு நாள் விடுமுறை, அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையேயான பாரபட்சமான நடவடிக்கைகளை மாற்றுதல், ஐ.டி.பி.ஐ வங்கியை தனியார்மயமாக்கக் கூடாது உள்ளிட்ட […]
கோவில்பட்டியில் நல்லாசிரியர் விருது பெற்ற மு.க.இப்ராஹிம் தலைமை ஆசிரியருக்கு சகாராவை தாண்டாத ஒட்டகம் பயிற்சி மையம் சார்பில் இலக்கியச் சாரல் அமைப்பு சார்பில் பாராட்டு விழா மற்றும் சிரிப்பு சிரப்பு புத்தகத் திறனாய்வு நடைபெற்றது. விழாவுக்கு ப.ஜான்கணேஷ் தலைமை தாங்கினார். இந்திராணி, ராஜேஷ் சங்கரப்பிள்ளை, முருகசரஸ்வதி, ஜெகநாதன், செந்தில்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போத்தி ராஜ் வரவேற்று பேசினார். ஓய்வு பெற்ற டி.எஸ்.பி, மனோகர், ஆசிரியர்கள் மகேந்திரன் கருப்பசாமி, ஸ்ரீதர், முருக இரத்தினம், கல்யாணசுந்தரம் ஆசிரியை பேச்சியம்மாள் […]
கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தின் ஆய்வுப்பொழிவு அஞ்சல் அலுவலக தெருவில் உள்ள மன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. முன்னாள் ராணுவ வீரர் ஜெயப்பிரகாசு நாராயணசாமி தலைமை தாங்கினார். திட்டங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கண்ணகி முன்னிலை வகித்தார். செயலர் நம்.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார். படைப்பாளிகளின் பார்வையில் அவர்தம் படைப்புகள் என்ற தலைப்பில் கரிசல் எழுத்தாளர் சாகித்ய அகடாமியின் பாலபுரஸ்கார் விருது பெற்ற உதயசங்கர் மற்றும் திருவள்ளுவர் மன்றத் துணைத் தலைவர் திருமலை முத்துச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இலக்கியக் குரிசில் […]
கோவில்பட்டி நாடார் உயர்நிலைப்பள்ளி 1974-1977 ஆண்டு பழைய மாணவர் சங்கம், தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனன இணைந்து மாதம் தோறும் நான்காவது ஞாயிறுதோறும் இலவசகண்சிகிச்சைமுகாம் நடத்தி வருகின்றன. அந்த வகையில் செப்டம்பர் மாத கடைசி ஞாயிறு அன்று 27-9-2026 கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயிண்ட் பால்ஸ் உயர்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை முகாம் நடைபெற்றது. கோவில்பட்டி தொழிலதிபர் என்.ராஜவேல் தலைமையில் சங்க நிர்வாகிகள் […]
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப் காட்டில் செயல்பட்டு வரும் டாட்டா சோலார் நிறுவனத்தில் தயாரிக்கப் படும் சோலார் பொருட் களை கொண்டு செல்ல தமிழகத்தைச் சேர்ந்த கன் டெய்னர் லாரிகளை பயன் படுத்தாமல் வட மாநில கன்டெய்னர் லாரிகளை பயன்படுத்தி வருவதாக வும், விதிமுறைகளை மீறி தமிழகத்திற்குள் சோலார் பொருட்களை கொண்டு செல்ல வட மாநிலங்களைச் சேர்ந்த கன்டெய்னர் லாரிகளைபயன்படுத்திவருவதாக கூறி,ஈவாகன்சேவை அமைப்பு குற்றம் சாட்டியது. மேலும் சம்பவத்தன்று இரவு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிஅருகே கயத்தார் சுங்கச்சாவடியில் […]
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில், 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ மாணவிகள் தங்களது பொது அறிவுத்திறனை வெளிப்படுத்தும் வகையில் மாநில அளவிலான விநாடி வினா போட்டி 7.10.2026 (புதன்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இதன் முதல் சுற்று காலை 10.30 மணிக்கும் இறுதிச்சுற்று மதியம் 1.30 மணிக்கும் நடைபெற உள்ளது. முதல் பரிசாக ரூ. 25,000,இரண்டாம் பரிசாக ரூ. 15,000,மூன்றாம் பரிசாக ரூ. 10,000 வழங்கப்பட உள்ளது. ,மேலும் ஆறுதல் பரிசாக 10 அணிகளுக்கு தலா […]







