தென் மண்டல ஆக்கி: 3 பிரிவுகளில் முதலிடம் பெற்ற பள்ளி அணிகளுக்கு கேடயம் பரிசு


கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி சார்பாக தென் மண்டல அளவிலான சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான ஆண்கள் ஆக்கி போட்டி மூன்று நாட்கள் நடைபெற்றது
இப்போட்டிகள் 14 வயது 17 வயது 19 வயது உட்பட்டவருக்காக மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டன மொத்தம் 47 அணிகள் கலந்து கொண்டு விளையாடின போட்டிகள் நாக் அவுட் சுற்றுகளாக நடைபெற்று அரை இறுதி போட்டி மட்டும் லீக் சுற்றுகளாக நடத்தப்பட்டன லீக் சுற்றின் முடிவில் அதிக புள்ளிகள் பெறும் அணிகளை வைத்து முதல் நான்கு இடங்கள் பகிர்ந்து அளிக்கப்படும்

14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளி 3-0 என்ற கோல் கணக்கில் மேட்டுப்பாளையம் எஸ் ஜே என் பள்ளியை வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தது.
17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி 3- 0 என்ற கோல் கணக்கில் மேட்டுப்பாளையம் எஸ் ஜே என் பள்ளி அணியை வெற்றி பெற்று முதல் இடத்தை பெற்றது
19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் மேட்டுப்பாளையம் எஸ் ஜே என் பள்ளி 7- 0 என்ற கோல் கணக்கில் சென்னை பி எஸ் பி பி அணியை வெற்றி பெற்று முதல் இடத்தை பெற்றது
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு வேல்ஸ் வித்யாலயா பள்ளியின் தாளாளர் நாகமுத்து தலைமை தாங்கினார் பள்ளியின் இயக்குனர் விஜயராணி பள்ளியின் முதல்வர் ஜன்னத் நிஷா உசேன், முன்னிலை வகித்தனர்
ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தேர்வு குழு தலைவர் குரு சித்திர சண்முக பாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு கேடயம் மற்றும் நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார்
14 வயது பிரிவில் வெற்றி பெற்ற தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளி 17 வயது பிரிவில் வெற்றி பெற்ற கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி 19 வயது பிரிவு போட்டியில் வெற்றி பெற்ற மேட்டுப்பாளையம் எஸ் ஜே என் பள்ளி ஆகிய அணிகள் அரியானாவில் அக்டோபர் 8 முதல் நடைபெற உள்ள தேசிய சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் ஆக்கி போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளன

நடந்து முடிந்த போட்டிகளுக்கு நடுவர்களாக தம்புராஜ், திருச்செல்வம், மதன்குமார், காளிதாஸ், அஸ்வின், சுரேஷ்குமார், மதுசூதனன், அக்சய், மணிகண்டன், வெங்கடேஷ், சிவானந்தம், மனோகர் , புகழேந்தி, சிங்கராஜ், சுரேஷ்குமார், வேல்முருகன், எல்பின், ராம் கார்த்திக், சண்முகப்பிரியா, கௌதம், ஆகியோர் செயல்பட்டனர்
பரிசளிப்பு விழாவில் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா, கிருஷ்ணமூர்த்தி, ஆக்கி பயிற்சியாளர் ஹானஸ்ட் ராஜ், உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேந்தர், மாரியப்பன், ஜெய் கணேஷ், வீரா, மதனா, ஆகியோர் செய்திருந்தனர் பள்ளியின் சீனியர் முதல்வர் ஆனந்தி ராஜேந்திரன் நன்றி கூறினார்.







