பண்டிட் தீன தயாள் உபாத்யாயா பிறந்த தின ஓவிய போட்டி
Oplus_16908288
கோவில்பட்டி பாண்டவர்மங்கலத்தில் இந்திய தத்துவ அறிஞரும்,பொருளாதார வல்லுநருமான பண்டிட் தீனதயாள் உபாத்யாயா 111 -வது பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு திட்டங்குளம் மகளிர் மன்ற உறுப்பினர் ரஞ்சிதமணி தலைமை தாங்கினார். பாண்டவர் மங்கலம் கஸ்தூரிபாய் காந்திஜி மகளீர் மன்ற தலைவி முருகலட்சுமி முன்னிலை வகித்தார்.
தூத்துக்குடி மாவட்ட இளையோர் மை பாரத் கேந்திரா மாவட்ட அலுவலர் மதுமிதா நோக்க உரை ஆற்றினார்.ஓய்வு பெற்ற நூலகர் சிவகுமார் அனைவரையும் வரவேற்றார்.

ஓய்த பெற்ற தலைமை ஆசிரியரும் கஸ்தூரிபாய் காந்திஜி மகளிர் மன்றத்தின் ஆலோசகர் விஜயன். பேசும் போது பண்டிட் தீன தயாள் உபாத்யாயா பெருமைகளை விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில் ஓவியப் போட்டி நடைபெற்றது. முதலாவது சுமிதா இரண்டாவது சூர்யா.மூன்றாவது யாமினி நான்காவது இடம் பெற்ற யோகா ஆகியோருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது .
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அபி சுவேதா மல்லிகா கல்பனா உதய தீபா கார்த்திகா ஹலேனா சுந்தராஜ் மற்றும் மகளிர் மன்ற உறுப்பினர்கள் செய்திருந்தனர்.







