கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற ஆய்வுப்பொழிவு
Oplus_16908288
கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தின் ஆய்வுப்பொழிவு அஞ்சல் அலுவலக தெருவில் உள்ள மன்ற கட்டிடத்தில் நடைபெற்றது.
முன்னாள் ராணுவ வீரர் ஜெயப்பிரகாசு நாராயணசாமி தலைமை தாங்கினார். திட்டங்குளம்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கண்ணகி முன்னிலை வகித்தார். செயலர் நம்.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார்.

படைப்பாளிகளின் பார்வையில் அவர்தம் படைப்புகள் என்ற தலைப்பில்
கரிசல் எழுத்தாளர் சாகித்ய அகடாமியின் பாலபுரஸ்கார் விருது பெற்ற உதயசங்கர் மற்றும் திருவள்ளுவர் மன்றத் துணைத் தலைவர் திருமலை முத்துச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இலக்கியக் குரிசில் நல்லாசிரியர் இராசாமணி, குறிஞ்சாங்குளம் இடைநிலை ஆசிரியர் முத்துதுரை ஆகியோர் ஆய்வு பற்றி விளக்கி பேசினர்.
ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி, நாடார் மேல்நிலைப்பள்ளி, கம்மவார் மேல்நிலைப்பள்ளி, ஜான் பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளிகளின் மூலம் பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
மன்றத்தலைவர் கருத்தப்பாண்டி நன்றி கூறினார்.

இந்நிகழ்வில் உலக திருக்குறள் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் பிரபு, இசைவாணர் சந்திரசேகர், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க கிளைத் தலைவர் மணிமொழி நங்கை, முனைவர் முருக சரஸ்வதி, விருதுநகர் மாவட்ட உலகத்திருக்குறள் கூட்டமைப்பு ஜெயா ஜனார்த்தனன்,
கோவில்பட்டி கம்பன் கழகம் தலைவர் துரைப்பாண்டி, எழுத்தாளர் பொன்னுராசு,தமிழ் பற்றாளர் ஜானகிராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







