கோவில்பட்டி முகாமில் இலவச கண் புரை அறுவை சிகிச்சைக்கு 16 பேர் தேர்வு
Oplus_16908288
கோவில்பட்டி நாடார் உயர்நிலைப்பள்ளி 1974-1977 ஆண்டு பழைய மாணவர் சங்கம், தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனன இணைந்து மாதம் தோறும் நான்காவது ஞாயிறுதோறும் இலவசகண்சிகிச்சைமுகாம் நடத்தி வருகின்றன.
அந்த வகையில் செப்டம்பர் மாத கடைசி ஞாயிறு அன்று 27-9-2026 கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயிண்ட் பால்ஸ் உயர்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை முகாம் நடைபெற்றது.

கோவில்பட்டி தொழிலதிபர் என்.ராஜவேல் தலைமையில் சங்க நிர்வாகிகள் முத்து கிருஷ்ணன், ராஜேந்திரன், பாலசுப்ரமணியன், ராஜேந்திரன்,.அருள்ஜான்,பாலகுமார்,ஜான் ஜெயபிரகாஷ், அருள் ஜான், . மணிக்கொடி, திருச்சிற்றம்பலம், பிரசன்னா ஆகியோர் முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றது.
முகாமில் 99 பேர் கண் பரிசோதனைகள் மேற்கொண்டனர் அவர்களில் கண்புரை அறுவை சிகிச்சைக்கு 16 பேர் தேர்வு செய்யப்பட்டு அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு அவர்களுக்கு இலவசமாக கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது







