விதிமுறைகளை மீறி சோலார் பொருட்களை ஏற்றி சென்றதாக 7 கன்டெய்னர் லாரிகளுக்கு அபராதம்
Oplus_16908288
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப் காட்டில் செயல்பட்டு வரும் டாட்டா சோலார் நிறுவனத்தில் தயாரிக்கப் படும் சோலார் பொருட் களை கொண்டு செல்ல தமிழகத்தைச் சேர்ந்த கன் டெய்னர் லாரிகளை பயன் படுத்தாமல் வட மாநில கன்டெய்னர் லாரிகளை பயன்படுத்தி வருவதாக வும், விதிமுறைகளை மீறி தமிழகத்திற்குள் சோலார் பொருட்களை கொண்டு செல்ல வட மாநிலங்களைச் சேர்ந்த கன்டெய்னர் லாரிகளை
பயன்படுத்திவருவதாக கூறி,
ஈவாகன்சேவை அமைப்பு குற்றம் சாட்டியது.

மேலும் சம்பவத்தன்று இரவு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி
அருகே கயத்தார் சுங்கச்சாவடியில் டாட்டா சோலார் நிறுவ னத்தில் இருந்து மதுரைக்கு சோலார் பொருட்களை ஏற் றிச் சென்ற 7 கன்டெய்னர் லாரிகளை சிறைபிடித்து கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவல கத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய வட்டாரப் போக் குவரத்து அலுவலர் கிரிஜா, மோட்டார் வாகன ஆய் வாளர் பெலிக்சன் மாசிலா மணி ஆகியோர் விதிமு றைகளை மீறியதாக 7 கன்டெய்னர் லாரிகளுக்கும் அபராதம் விதித்தனர். ஒவ்வொரு
,லாரிக்கும் ரூ. 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை அபராதம் விதித்தனர்







