கோவில்பட்டி நேஷனல் கல்லூரியில்,பள்ளி மாணவ மாணவிகளுக்கான விநாடி வினா போட்டி; 7-ந் தேதி நடக்கிறது
Oplus_16908288
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில், 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ மாணவிகள் தங்களது பொது அறிவுத்திறனை வெளிப்படுத்தும் வகையில் மாநில அளவிலான விநாடி வினா போட்டி 7.10.2026 (புதன்கிழமை) அன்று நடைபெற உள்ளது.
இதன் முதல் சுற்று காலை 10.30 மணிக்கும் இறுதிச்சுற்று மதியம் 1.30 மணிக்கும் நடைபெற உள்ளது. முதல் பரிசாக ரூ. 25,000,இரண்டாம் பரிசாக ரூ. 15,000,மூன்றாம் பரிசாக ரூ. 10,000 வழங்கப்பட உள்ளது.

,மேலும் ஆறுதல் பரிசாக 10 அணிகளுக்கு தலா ரூ. 5,000 வீதம் வழங்கப்பட இருக்கிறது. இப்போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள் கல்லூரி இணையதளத்தில் www.nec.edu.in போட்டி தொடர்பான அனைத்து விபரங்களையும் தெரிந்து கொண்டு, கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து அதனை,பூர்த்தி செய்து,பள்ளி முதல்வர் கையொப்பத்துடன் https://forms.gle/KdgdKuereyt7utMbA என்ற கூகுள் பார்மை பூர்த்தி செய்ய வேண்டும்.
அல்லது கல்லூரி முகவரிக்கு அஞ்சல் அனுப்பியும் பதிவு செய்து போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் மற்றும் அழைத்து வரும் ஆசிரியர்/பெற்றோருக்கு மதிய உணவு வழங்கப்படும். மேலும், தேவைப்பட்டால் போட்டிக்கு முந்தைய நாள் உணவு மற்றும் தங்கும் வசதி கல்லூரியில் இலவசமாக ஏற்பாடு செய்து தரப்படும். பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் 5.10.2026 ஆகும்.

இந்த விநாடி வினா நிகழ்ச்சியினை விளையாட்டு விமர்சகர் மற்றும் பிரபல குயிஸ் மாஸ்டர் சுமந்த்.சி.இராமன் தொகுத்து வழங்குகிறார். இப்போட்டி குறித்து எழும் சந்தேகங்களுக்கு 73053 55923, 9894799284 –என்ற அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் எனக் கல்லூரி முதல்வர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.







