கோவில்பட்டியில் சிறுவர், சிறுமிகளுக்கான பாறை ஓவியம் பயிற்சி வகுப்பு
Oplus_16908288

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் கோவில்பட்டி டெம்பிள் சிட்டி இணைந்து நடத்திய பாறை ஓவியம் ஒரு நாள் பயிற்சி வகுப்பு கோவில்பட்டி கரிசல் எழுத்தாளர் கி ராஜநாராயணன் நினைவரகத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சியை தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் பாலசாகித்ய அகாடமி விருத்தாளர் உதயசங்கர் மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் கோவில்பட்டி டெம்பிள் சிட்டி நிகழ்ச்சி தலைவர் மருத்துவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் கோவில்பட்டி கிளைத் தலைவர் ஆசிரியை மணிமொழி நங்கை தலைமை தாங்கினார். லயன்ஸ் கிளப் ஆப் கோவில்பட்டி டெம்பிள் சிட்டி தலைவர் முருகேஷ் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் கிளைச்செயலாளர் பிரபு வரவேற்றார். பாறை ஓவியப் பயிற்சி ஆசிரியர் நெல்லை அப்பாவு லெனின் கலந்துகொண்டு சுமார் 40க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து வந்திருந்த 140-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு இப்பயிற்சியில் பாறை ஓவியத்தின் வரலாறு மற்றும் தமிழர்களின் பண்டைய கால வாழ்க்கை முறை பற்றிய ஓவியங்களை மண்பாண்டங்கள் செய்யும் மண்ணைக் கொண்டு வெள்ளை அட்டை தாளில் ஓவியமாக வரைவதற்கு பயிற்சி அளித்தார்.
இப்பயிற்சி வகுப்பில் தமிழ்நாடு அனைத்து வணிக சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மாவட்டத் தலைவர் கோவில்பட்டி தங்கமணி,தொழில் அதிபர்கள் கார்த்திக், ராமச்சந்திரன், ஜெயபாஸ் தசிஎகச கிளைப் பொருளாளர் ஆசிரியர் கண்ணகி, எழுத்தாளர்கள் ராஜலட்சுமி நாராயணசாமி, வரகவி நல்லாசிரியர் முருகேசன், பொன்னராசு, இலக்கியச்சாரல் நிறுவனர் ஆசிரியர் தினகரன் மற்றும் ஏராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இப்பாறை ஓவிய ஒரு நாள் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கியும் பங்கேற்றமைக்கான சான்றிதழ்கள் வழங்கியும் கவுரவிக்கப்பட்டனர்.தொழிலதிபர் கண்ணன் நன்றி கூறினார்.







