கல்லூரி மாணவ, மாணவிகள் 25 பேருக்கு கல்வி உதவித்தொகை
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர். ச.சங்கர் கணேஷ் வரவேற்று பேசினார். கல்லூரி . முதல்வரும் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவருமான அ.பாண்டியராணி தலைமை தாங்கி பேசினார். சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் பா.மகேஷ்குமார் வாழத்துரை வழங்கினார்.
முன்னாள் மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் . ஆர்.கருப்பசாமி, கூடுதல் துணைத் தலைவர் வி.இராமசுப்ரமணியன், இணைச் செயலாளர் .பொ.பொன்ஸ்ரீராம், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் . வி.எஸ்.பாபு, ர் ப.பாலசுப்பிரமணியன் மற்றும்.ஆர்.சுனையரசன் ஆகியோர் கல்லூரியின் வளர்ச்சி மற்றும் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு குறித்து பேசினார்கள்.

முன்னாள் மாணவர் சங்கத்தின் வரவு செலவு அறிக்கையினை சங்கத்தின் பொருளாளர் சு.பாலா சமர்ப்பித்தார். சங்கத்தின் ஆண்டறிக்கை மற்றும் தீர்மானங்களை செயலாளர் ரா.கவிதாமஞ்சு வாசித்தார். அனைவரின் ஒப்புதலுடன் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இணைச்செயலாளர் சா.சிவசக்தி, கல்வி உதவித் தொகைப் பெயர்ப்பட்டியலை வாசித்தார். சங்கத்தின் துணைத்தலைவரும் ரோஸ் மேட்சஸ் உரிமையாளருமான ஆர்.கருப்பசாமி வழங்கிய நன்கொடை தொகை மற்றும் சங்கத்தின் நிதியையும் சேர்த்து ரூ.1,15,000/- கல்வியில் சிறந்த 25 மாணவ, மாணவியர்களுக்கு பகிர்ந்து கல்வி ஊக்கத் தொகை காசோலையாக வழங்கப்பட்டது.
முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற குறும்பட, புகைப்பட மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிர்வாகக்குழு உறுப்பினர் வி.செல்வராணி நன்றி கூறினார்







