துணை ஜனாதிபதி தூத்துக்குடி வருகை; கவர்னர், அமைச்சர் வரவேற்றனர்


தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியின் பவள விழா மற்றும் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று புதன்கிழமை நடைபெறுகிறது. இக்கல்லூரியின் முன்னாள் மாணவரான துணை குடியரசுத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 105-ஆவது ஆண்டு நிறுவன நாள் விழாவிலும் பங்கேற்கிறாா்.
இவ்விரு நிகழ்ச்சிகளிலும் தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரும் பங்கேற்கிறாா். இதை முன்னிட்டு விழா நடைபெறும் வ.உ.சி. கல்லூரி வளாகம், திருச்செந்தூா் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுட்டுள்ளனர்.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரியின் பவள விழா மற்றும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 105-வது நிறுவன விழாக்களில் கலந்துகொள்வதற்காகத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (காலை தூத்துக்குடிக்கு வருகை தந்தார்.
தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு விமானம் மூலம் வருகை தந்த துணை ஜனாதிபதியை தமிழ்நாடு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பொன்னாடை அணிவித்து, சிறப்பு நினைவுப் பரிசு வழங்கி வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் ஸ்ரீநாத், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், மாவட்ட எஸ்பி சிவபிரசாத், மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் புத்தகங்கள் வழங்கி வரவேற்றனர்.







