• November 11, 2026

தாத்தா சொத்தில் பேரன் பங்கு கேட்க முடியாது – சுப்ரீம்  கோர்ட்டு  அதிரடி தீர்ப்பு!

 தாத்தா சொத்தில் பேரன் பங்கு கேட்க முடியாது – சுப்ரீம்  கோர்ட்டு  அதிரடி தீர்ப்பு!

தந்தையின் சொத்தில் பங்கு கேட்டு மகன் தொடர்ந்த 29 ஆண்டுகால வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அமர்வு, நீதிமன்றம்  சொத்துரிமை தொடர்பான முக்கியத் தீர்ப்பை வழங்கி உள்ளது.

நீதிபதிகள் அகஸ்டீன் ஜார்ஜ் மாசி மற்றும் சுனிதா அகர்வால்ஆகியோர்  அடங்கிய அமர்வு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பின் முக்கிய விவரங்கள்: தாத்தாவின் சொத்துப் பாகப்பிரிவினை மூலம் தந்தை மூலம் பெறப்பட்ட சொத்தில், பேரனுக்கு எந்தவிதமான பிறப்புரிமையும் கிடையாது.

இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956-ன் பிரிவு 8-ன்படி, தாத்தாவிடமிருந்து சொத்தைப் பெறும் தந்தை மட்டுமே அதன் முழு உரிமையாளர் ஆகிறார். அந்தச் சொத்தை விற்பனை செய்வது, நிர்வகிப்பது அல்லது தனது மகனுக்கு உரிமை வழங்காமல் இருப்பது உள்ளிட்ட முடிவுகளைத் தந்தை சுதந்திரமாக எடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *