• November 11, 2026

இரட்டை கொலை வழக்கில் தூத்துக்குடி வாலிபர்கள் உள்பட 6 பேர் கைது 

 இரட்டை கொலை வழக்கில் தூத்துக்குடி வாலிபர்கள் உள்பட 6 பேர் கைது 

திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே இனாம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த ராகுல் (வயது 17), விஷால் (17) ஆகிய இரண்டு சிறார்கள் கடந்த தீபாவளியன்று நள்ளிரவில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

சமயபுரம் போலீசார் நடத்திய விசாரணையில், ராகுலுக்கும், குற்றவாளி கெனி என்பவருக்கும் இடையே ஒரு சிறுமியைக் காதலிப்பது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் இக்கொலை நடந்தது தெரியவந்தது. ராகுலைக் கொலை செய்ய முயன்றபோது அவருடன் இருந்த விஷாலும் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

இரட்டை கொலை வழக்கு தொடர்பாக சமயபுரம் சோலை நகரைச் சேர்ந்த கிருபாகரன் (19), ஹரிஹரன் (22), இனாம் சமயபுரம் சிவனேசன் (21), லால்குடி சரவணன் (18) மற்றும் தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சேர்ந்த கெனி வின்ஸ் (19), ரெனிசன் (20) ஆகிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை மீட்க குற்றவாளிகளில் ஒருவரான சிவனேசன் என்பவரை இன்று அதிகாலை கரியமாணிக்கம் பிரிவு சாலைக்குச் சமயபுரம் ஆய்வாளர் குணசேகரன் தலைமையிலான போலீசார் அழைத்துச் சென்றனர்.

அப்போது சிவனேசன் அங்கிருந்த கற்களால் தாக்கியதில் போலீஸ் ஜீப் கண்ணாடி நொறுங்கியது. மேலும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காவலர் மோகன் என்பவரை வெட்டிவிட்டுத் தப்ப முயன்றார். இதையடுத்து, ஆய்வாளர் குணசேகரன் தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டதில் சிவனேசனின் இடது காலில் குண்டு பாய்ந்து காயம் அடைந்தார்.

படுகாயமடைந்த காவலர் மோகன் மற்றும் சுடப்பட்ட குற்றவாளி சிவனேசன் ஆகிய இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருச்சி மாவட்ட எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் காவலர் மோகனை பார்வையிட்டு பாராட்டினார்.

கைது செய்யப்பட்ட கெனி வின்ஸ் மீது 5 வழக்குகளும், ரெனிசன் மீது 4 வழக்குகளும், சிவனேசன் மீது ஒரு வழக்கும் ஏற்கனவே நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *