கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ 5 ஆயிரம் அபராதம்
கோவில்பட்டி சண்முக சிகாமணி நகரைச் சேர்ந்தவர் ஜெயந்தி. கணவனை இழந்த இவர், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். இருப்பினும், இவரது புகாரின் மீது எவ்வித உரிய நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அலட்சியப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட ஜெயந்தி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி முருகன், கணவனை இழந்த பெண்ணின் புகாரை முறையாக விசாரணை நடத்த தவறிய கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வானுமாமலைக்கு ரூ.5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண் அளித்த முதன்மைப் புகார் குறித்தும், அப்புகாரை விசாரிக்காமல் அலட்சியமாகச் செயல்பட்டபோலீஸ் இன்ஸ்பெக்டர் வானுமாமலை மீதான புகார் குறித்தும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.







