• November 10, 2026

கொலைத் திட்டத்துடன் ஆயுதங்களுடன் சுற்றிய கும்பல் கைது ; கோவில்பட்டி மேற்கு போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு

 கொலைத் திட்டத்துடன் ஆயுதங்களுடன் சுற்றிய கும்பல் கைது ; கோவில்பட்டி மேற்கு போலீசாருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு

கோவில்பட்டியில் கொலை செய்யும் நோக்கில் ஆபத்தான ஆயுதங்களுடன் சென்ற நபர்களை கண்டறிந்து கைது செய்த மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி இரா. திருநாவுக்கரசு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர் மா. சிவனுத்தாய் தலைமையிலான போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த வாகனத்தை மறித்து சோதனை செய்தபோது, அதில் ஒருவரை  கொலை செய்யும் நோக்கில் ஆபத்தான ஆயுதங்களுடன் சென்ற நபர்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இந்தக் குற்றத் தடுப்பு நடவடிக்கையைச் சிறப்பாக மேற்கொண்ட சிறப்பு உதவி ஆய்வாளர் மா. சிவனுத்தாய், தலைமைக் காவலர்கள் மு. கனிசேகர் மற்றும் ரா. ராஜேந்திரன் ஆகியோரை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு நேரில் அழைத்துப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *