மாவட்ட ஆக்கிப்போட்டி : கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி `சாம்பியன் ‘
Oplus_16908288
கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஆக்கிப்போட்டி கோவில்பட்டி பசுவந்தனை மெயின் ரோட்டில் உள்ள ஸ்கை ஹை செயற்கை இலை மைதானத்தில் இரண்டு நாட்கள் தநடைபெற்றது.
பசும்பொன் சித்தர் வெற்றி கழக கோப்பைக்கான இப் போட்டியில் மொத்தம் 14 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இன்று (9 11 2026 )காலை நடைபெற்ற முதலாவது அரை இறுதி போட்டியில் வேல்ஸ் ஆக்கி அகாடமி அணியும் கூசாலிபட்டி அசோக் நினைவு ஆக்கி அணியும் மோதின. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்து சமநிலையில் முடிவு பெற்றது.
இதனால் நடைபெற்ற டைபிரேக்கர் ரேகர் முறையில் 5-4 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் ஆக்கி அகாடமி அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இன்னொரு அரையிறுதி போட்டியில் யங் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 4-1 என்ற கோல் கணக்கில் டாக்டர் அம்பேத்கர் ஆக்கி அணியை வீழ்த்தி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் கூசாலிப்பட்டி அசோக் நினைவு ஆக்கி அணி 3-1 என்ற கோல் கணக்கில் இலுப்பையூரணி அம்பேத்கார் ஆக்கி அணியை வீழ்த்தி வெற்றி பெற்று மூன்றாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டது. இந்த போட்டியில் தோல்வியடைந்த அம்பேத்கர் ஆக்கி அணி நான்காவது இடத்தை தட்டிச் சென்றது.
இறுதிப் போட்டியில் கோவில்பட்டி யங் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் கோவில்பட்டி வேல்ஸ் ஆக்கி அகாடமி அணியும் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் யங் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் ஆக்கி அகாடமி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
இறுதிப் போட்டிக்கு பின்னர் மாநில தேர்வு குழு தலைவரும் தூத்துக்குடி மாவட்ட ஆக்கி கழக செயலாளர் குரு சித்ர சண்முக பாரதி, பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா தலைமையில் கவுன்சிலர் கவியரசன், வெல்கம் டி ரேடர்ஸ் கமலேஷ் ஆகியோர் முன்னிலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
யங் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் மாரியப்பன் வரவேற்று பேசினார். வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளையும் பரிசுகளையும் பசும்பொன் சித்தர் வெற்றி கழகத்தின் மாநில தலைவர் வைகுண்ட பாண்டியன் மாநில மகளிர் அணி தலைவி பத்மப்ரியா மாநில இளைஞரணி செயலாளர் அருண்குமார் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜா தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் பிரகாஷ் கோவில்பட்டி நகர செயலாளர் பால்பாண்டியன் கோவில்பட்டி நகர துணைச் செயலாளர் மகேந்திரன் ஆகியோர் வழங்கினார்கள்

போட்டிகளுக்கு நடுவர்களாக காளிதாஸ், மதன்குமார், அஸ்வின், சிவானந்த், வேல்முருகன், மாதவன், சண்முகப்பிரியா, மதனா , பேபி, ஆகியோர் செயல்பட்டனர்.
விழா முடிவில் கே.கார்த்திக் நன்றி கூறினார்.போட்டிக்கான ஏற்பாடுகளை முனிராஜ்,தீனா,கருப்பசாமி,மணிராஜ், மாதவன், மதன், கார்த்திக், கார்த்திக் ராஜா, , கௌதம், விஜய் ஆகியோர் செய்திருந்தனர்







