மாற்றுத்திறனாளிகள்,முதியோர்களுக்கு நல உதவிகள்
Oplus_16908288
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் சுமார் 500 பேருக்கு உணவு, புத்தாடைகள் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக விவசாயத் தொழிலாளர் அணி அமைப்பாளருமான சண்முகராஜ் ஏற்பாட்டில், பசுவந்தனை சாலை அம்பாள் நகரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன், கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் சுமார் 500 பேருக்கு உணவு, புத்தாடைகள் உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலர் (கிழக்கு) சுரேஷ், ஒன்றியச் செயலர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், ஜெய கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கிருஷ்ணவேணி சண்முகராஜ் வரவேற்றார். சண்முகராஜ் நன்றி கூறினார்.







