கோவில்பட்டியில் 2குழந்தைகளை கொன்றவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
Oplus_16908288
கோவில்பட்டி, இலுப்பையூரணி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் தேவிகுமார் (43/26). கடன் தொல்லை காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
இதனால் அவர் தனது 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றார். இருப்பினும் அவர் உயிர் பிழைத்துக்கொண்டார்.

2 குழந்தைகளை கொன்றதாக தேவிகுமாரை கோவில்பட்டி கிழக்கு போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தூத்துக்குடி முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்து நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. தேவிகுமார் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டு அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தாண்டவம் தீர்ப்பளித்தார்.







