• November 3, 2026

அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை

 அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை

Oplus_16908288

தூத்துக்குடி மாவட்டம் காடல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காடல்குடி, என்.ஜெகவீரபுரம் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் காளிதாஸ் (வயது 35). அதிமுக பிரமுகரான இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக எரித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வேல்சாமி மகன் அழகுபாண்டி (52/26), செல்லப்பாண்டி மகன் மாரிச்சாமி (51/26), தமிழரசன் மகன் சதீஷ்குமார் (33/26), அழகுபாண்டி மகன் பாண்டீஸ்வரன் (26/26), அன்புராஜா மகன் மனோஜ் குமார் (36/26) செல்லப்பாண்டி மகன் முருகன் (54/26) ஆகிய 6 பேர்களை காடல்குடி  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 இவர்கள் மீதான வழக்கு தூத்துக்குடி முதலாவது கூடுதல் கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி தாண்டவம் தீர்ப்பளித்தார்.

 குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்து ஆயுள் தண்டனை விதித்து அவர் தீர்ப்பு வழங்கினார். மேலும் 6 பேருக்கும் தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது

 தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 33 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *