• November 3, 2026

இயல், இசை, நாடக மன்ற தலைவர் பதவிக்கு ரூ. 5 கோடி லஞ்சம் பேரம் : அமைச்சர் ராஜ்மோகன் மீது திமுக புகார்

 இயல், இசை, நாடக மன்ற தலைவர் பதவிக்கு ரூ. 5 கோடி லஞ்சம் பேரம் : அமைச்சர் ராஜ்மோகன் மீது திமுக புகார்

 இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ரூ. 5 கோடி பேரம் பேசப்பட்டதாக அமைச்சர் ராஜ்மோகன் கூறியதை ஆதாரமாக கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஊழல் தடுப்பு பிரிவில் திமுகவின் பரந்தாமன் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சிய அரங்கில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக தமிழ்நாடு நாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், இயல் இசை நாடக மன்ற தலைவர் பதவியை தனக்கு கொடுத்தால் 5 கோடி ரூபாய் தருகிறேன் என ஒருவர் கூறுகிறார் என லயோலா மணி வந்து தன்னிடம் வந்து கூறினார் என்றும், ஆனால் 500 கோடி ரூபாய் கொடுத்தாலும் காசு வாங்கி கொண்டு பதவி வழங்க மாட்டேன், அந்த பதவி உரிய நபருக்கு தான் வழங்கப்படும் என்று கூறினேன் என்றும் அவர் பேசினார்.

மேலும் யாரிடமும் 1 ரூபாய் கூட வாங்காமல், அந்த பதவிக்கு தகுதியானவரான நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்றும் அமைச்சர்  ராஜ்மோகன் பேசியிருந்தார்.

லஞ்சம் கொடுக்க ஒருவர் முன்வந்தும் அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் நடவடிக்கை எடுக்காமல், அதனை மேடையில் பேசியது ஏன் என அமைச்சர் ராஜ்மோகன் மீதும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லயோலா மணி மீதும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியதை ஆதாரமாக கொண்டு ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *