• November 1, 2026

விசிக முன்னாள் நிர்வாகி கொலையில் 4 பேர்  கைது

 விசிக முன்னாள் நிர்வாகி கொலையில் 4 பேர்  கைது

தூத்துக்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்னாள் நிர்வாகியான  தாளமுத்துநகர் சோட்டையன்தோப்பு பகுதியைச் சேர்ந்தபாலமுருகன் (வயது 40). காய்கறி கடை நடத்தி வந்த இவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளரான 

பாலமுருகன் இன்று காலை 6.30 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காகச் சேதுபாதை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்குச் சென்றுள்ளார்.

அப்போது 2 இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், பாலமுருகனைச் சுற்றி வளைத்து அருவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பாலமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணையில், பாலமுருகனின் அக்காள் மகளுக்கு இன்று பூப்புனித நீராட்டு விழா நடைபெற இருந்ததை முன்னிட்டுச் சோட்டையன்தோப்பு பிரதான சாலையில் பேனர் வைத்திருந்தார். அதன் அருகே அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க. சுற்றுச்சூழல் அணி நிர்வாகியும் பார் உரிமையாளருமான ரவி என்பவர், தான் நடத்தவிருந்த மாட்டு வண்டிப் போட்டிக்கான பேனரை வைத்துள்ளார். 

இதில் பார் ரவி வைத்த பேனரில் இருந்த படங்களைப் பார்த்துப் பாலமுருகன் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த  ரவி,கூலிப்படை மூலம் பாலமுருகனைக் கொலை செய்தது தெரியவந்தது.

 நெல்லை சரக டி.ஐ.ஜி. இரா. திருநாவுக்கரசு, சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பெட்ரோல் பங்க்கில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்த தனிப்படை போலீசார், கொலை நடந்த 1 மணி நேரத்திற்குள் முக்கியக் குற்றவாளியான ரவி, சிவக்குமார், மணிகண்டன், சிவசந்திரன் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *