தூத்துக்குடி பெட்ரோல் பங்க்கில் பயங்கரம் : விசிக முன்னாள் நிர்வாகி வெட்டிக்கொலை
தூத்துக்குடி சோட்டையன் தோப்பு பகுதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) முன்னாள் நிர்வாகி பாலமுருகன் (வயது 40) மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அ. சண்முகபுரம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் இன்று காலை (நவம்பர் 1 )பெட்ரோல் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட வந்த பாலமுருகனை அவர்கள் சுற்றி வளைத்து அறிவாளர்கள் சரமாரியாக வெற்றினார்கள் இது சம்பவ இடத்திலேயே அவர் இறந்து போனார். இது கொலையை தொடர்ந்து அங்கிருந்து கொலையாளிகள் தப்பி சென்று விட்டனர்.
பேனர் கட்டுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, பாலமுருகனை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொலைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தூத்துக்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலமுருகன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட பாலமுருகன் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 11 நாட்களில் நடக்கும் 10-வது கொலை இதுவாகும். இதனால் மக்களிடையே அச்சமும், சட்டம் ஒழுங்கு குறித்த கவலையும் எழுந்துள்ளது.







