முதியோருக்கு தீபாவளி புத்தாடை
கோவில்பட்டியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மக்கள் நல அறக்கட்டளை சார்பாக தீபாவளி பண்டிகையையொட்டிவருடம் தோறும் முதியோர்களுக்கு தீபாவளி புத்தாடை வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல் இந்த வருடமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புது ரோடு முத்தையாம்மால் தெருவில் முதியோர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் நேதாஜி பாலமுருகன் தலைமை தாங்கினார். ரத்தினவேல், நாகராஜ், பழனி,செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அறக்கட்டளை சேர்ந்த கண்ணன் புத்தாடை வழங்கினார். அறக்கட்டளையை சேர்ந்த காமராஜ்,மதிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்







