• November 2, 2026

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்டம்

 கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண தேரோட்டம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை  பூவனநாதசுவாமி திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா நடைபெற்று வருகிறது.

விழாவின் 9 நாளான இன்று  (திங்கட்கிழமை)
தேரோட்டம் நடைபெற்றது.இதையொட்டி அதி காலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது.காலை 4:30 மணிக்கு -திருவனந்தல் பூஜை நடைபெற்றது.

காலை 6  மணி முதல் 7  மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட அம்மன்,திருத்தேரில் எழுந்தருளினார்.காலை 9 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து சென்றனர். நான்கு மாத வீதிகளில் தேர் வலம் வந்து நிலையை அடைந்தது.

இரவு 7 மணிக்கு – அன்ன வாகனத்தில் அம்பாள் திருவீதி உலா நடக்கிறது.
மண்டகப்படித்தாரர்:
வணிய வைசிய சங்கம், கோவில்பட்டி.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *