• November 2, 2026

கோவில்பட்டியில் இலவச மருத்துவ முகாம் 

 கோவில்பட்டியில் இலவச மருத்துவ முகாம் 

கோவில்பட்டி சிஎஸ்ஐ தூய பவுலின் ஆலய வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. சேகர மற்றும் சபை மன்ற தலைவர் ஆண்ட்ரூ விக்டர் ஞான ஒளி தலைமை தாங்கினார். கவுரவ குரு இம்மானுவேல், உதவி குரு ஜெகன், சபை ஊழியர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சேகர மற்றும் சபை மன்ற தலைவரின் மனைவி லோவிசாள் முகாமை தொடக்கி வைத்தார். முகாமில், சிறப்பு மருத்துவ நிபுணர்கள் தேவ பிரசாத் ஜெயசேகரன், ஜெப்ரி ஆஷிக், கவுதம், ரேணு தேவபிரசாத், பிரியா நிலா, மோகன் ராஜா, ஜீன் காவியா, ரூஃபஸ் ஆரோக்கியதாஸ், பிரேம்நாத் பான் ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர், முகாமில் பங்கேற்ற சுமார் 200 பேருக்கு சிகிச்சை அளித்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.

 மேலும், தேவையானவர்களுக்கு இசிஜி., ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் தேவையான மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. 

முகாமில், சேகர செயலர் ஜேக்கப் ராஜாமணி, பொருளாளர் ஜான் ஜெபராஜ், முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் கிறிஸ்டோபர், எழில் பிரபு, லிவிங்ஸ்டன் தங்கையா, காட்வின், பிரபாகரன், இன்பராஜ் தனவந்தன், மேத்யூ, ஜான் ஜோதி, ஜோசப், லாரன்ஸ், சாமுவேல், டேவிட் அருணாச்சலம், துரைப்பாண்டி, செந்தில் ஆண்டவர் பசுமை டிரஸ்ட் நிறுவனர் கூடலிங்கம் ஆறுமுகச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *