• November 3, 2026

ஆன்மாக்கள் தினம்: கோவில்பட்டி கல்லறை தோட்டத்தில்  திருப்பலி

 ஆன்மாக்கள் தினம்: கோவில்பட்டி கல்லறை தோட்டத்தில்  திருப்பலி

Oplus_16908288

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ம் தேதி அனைத்து ஆன்மாக்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை கல்லறை திருநாள் என்று அழைக்கின்றனர். கல்லறை திருநாளில், கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்த கல்லறைகளை சுத்தப்படுத்தி குடும்பத்தோடு ஜெபம் செய்வது வழக்கம். மேலும், கல்லறை தோட்டங்களில் சிறப்பு ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடும் நடைபெறும்.

அதன்படி, கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தின் கல்லறை தோட்டத்தில் மாலை 4 மணிக்கு பங்குத்தந்தை அருள்ராஜ் அடிகளார், உதவி பங்குத்தந்தை குழந்தைராஜ் அடிகளார் இணைந்து திருப்பலி நிறைவேற்றி கல்லறைகளை மந்திரித்தனர். 

இதேபோல், கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தின் கிளை பங்குகளான லிங்கம்பட்டி, இலுப்பையூரணி, பூசாரிபட்டி, பாண்டவர்மங்கலம், கசவன்குன்று, திட்டங்குளம் ஆகிய ஊர்களில் கல்லறை தோட்டங்களிலும் உள்ள கல்லறைகளும் அருட்தந்தையர்களால் மந்திரிக்கப்பட்டன. இதில் அருட்சகோதரிகள் மற்றும் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *