• November 9, 2026

கோவில்பட்டியில் இருந்து ரெயிலில் தடையை மீறி பட்டாசு கொண்டு செல்ல முயன்ற மதுரை வாலிபர் கைது

 கோவில்பட்டியில் இருந்து ரெயிலில் தடையை மீறி பட்டாசு கொண்டு செல்ல முயன்ற மதுரை வாலிபர் கைது

ரெயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கு டிராலியில் 10 வகையான  எடுத்து வந்து அவற்றை ரெயிலில் ஏற்றிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

இதை கவனித்த ரெயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் சங்கர பாண்டி மற்றும் ரெயில்வே போலீஸ் தலைமை காவலர்கள் முருகானந்தம், சங்கரலிங்கம் ஆகியோர் பட்டாசுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் மதுரை காமராஜபுரம் குமரன் தெருவை சேர்ந்த பொன்ராஜின் மகன் டேனியல் அலெக்ஸ் பால் பொன்ராஜ் (வயது 26) என்பது தெரியவந்தது. அவர் தூத்துக்குடி – மைசூரு விரைவு ரெயிலில் பட்டாசுகளைக் கொண்டு செல்ல முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை ரெயில்வே பாதுகாப்புப் படை போலீசார் கைது செய்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *