• November 5, 2026

குற்ற வழக்குகளில் சிறார்கள் ஈடுபடுவது கவலை அளிக்கிறது; நீதிபதி  சுபாஷினி பேச்சு 

 குற்ற வழக்குகளில் சிறார்கள் ஈடுபடுவது கவலை அளிக்கிறது; நீதிபதி  சுபாஷினி பேச்சு 

  தமிழ்நாடு அரசு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு மற்றும்  மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் போதை மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் தூத்துக்குடி சின்ன கோவில் வளாகத்தில் உள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.  

      நிகழ்ச்சிக்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் எஸ் ஜே கென்னடி தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பிரான்சிஸ் சேவியர், தலைமையாசிரியர்  அமல்ராஜ், ஆகியோர் முன்னிலை வைத்தனர்.சிறப்பு விருந்தினராக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளரும், மூத்த உரிமையியல் நீதிபதியுமான ஏ.வி. சுபாஷினி கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில்  மரக்கன்றுகளை நட்டார்.

தொடர்ந்து அரங்கத்தில் நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து  பேசினார் அப்போது அவர் கூறியதாவது :

தூத்துக்குடி மாவட்டத்தில் போதை மற்றும் புகையிலை பழக்கம்  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே அதிகரித்து  வருகிறது. இதனால் சமூகத்தில் பல்வேறு குற்ற செயல்கள் நடைபெறுகிறது. இதனை தடுக்க வேண்டும். என்றால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும்  இளைஞர்கள் போதை பழக்கத்தில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும். 

குழந்தைகளை கல்வி மற்றும் விளையாட்டில் ஊக்கப்படுத்த வேண்டும். என்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

    மாணவர்கள் படிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். படித்தால் மட்டுமே வாழ்க்கையில் உயர்ந்த பதவி பொறுப்புகளை அடைய முடியும். மேலும் மாணவர்கள் ஓய்வு நேரத்தில் விளையாட்டில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். உடலையும், மனதையும் உறுதியாக  வைத்துக் கொள்ள வேண்டும். பாடப்புத்தகத்தை  கையெடுப்போம் போதையை விட்டொழிவோம். 

இவ்வாறு நீதிபதி சுபாஷினி பேசி னார் 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக அலுவலர் பி. அனுசியா  மதுவினால் ஏற்படும் தீமைகள், மது பழக்கத்தால் , சமூக சீர்கேடுகள் பற்றி எடுத்துக் கூறினார்.      

         போதை மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழியை மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளர் எஸ் பானுமதி வாசிக்க  மாணவர்கள் திரும்ப சொல்லி உறுதிமொழி ஏற்றனர்.

       முன்னதாக மதர் சமூக சேவை நிறுவன துணைத் தலைவர் சுதாகர் அனைவரையும் வரவேற்றார்.  பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு பிரிவு சமூகப் பணியாளர் வ. ரொசாரி பாத்திமா  ஒலி – ஒளி படகாட்சி மற்றும்  வீடியோ விளக்கத்தின் மூலம்  விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

போதை மற்றும் புகையிலை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் போதை பழக்கத்தால் வரக்கூடிய நோய்கள் அதற்கான  ஆலோசனை மற்றும் மருத்துவ சிகிச்சையின் அவசியம் பற்றி தெளிவாக எடுத்துரைத்தார்

         முடிவில் மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளர் எஸ் பானுமதி நன்றி கூறினார்.  மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்  ரூபி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக அலுவலர் ஜேம்ஸ் அமிர்தராஜ் நாட்டு நலப்படி திட்ட அலுவலர் தாமஸ், பள்ளி ஆசிரியர்கள் டோமினிக் சாவியோ, பெனிடன், லியோ, மற்றும் சுமார் 500 மேற்பட்ட பள்ளி மாணவர்கள்  கலந்து கொண்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *